விக்கெட் எடுத்து ஜெயிக்க வைப்பவர்களை பார்த்தால் உங்களுக்கு பிடிக்காதா ? அவர்களை தேர்வு செய்ய மாட்டீர்களா ? – டெல்லி ஓனர் கடும் விமர்சனம்

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இடம் கிடைப்பது இல்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் அபாரமாக போட்டிகளை வென்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

Ashwin

இருந்தாலும் அணியில் இடம் கிடைப்பதில்லை. இது தொடர்பாக டெல்லி கேப்பிடல் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் செய்துள்ள ட்வீட் :

அஸ்வின் ஏன் இந்திய அணியில் இல்லை? விக்கெட்டுகளை எடுப்பவர்களை கண்டால் இந்திய அணிக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது! நியுஸிலாந்தில் டி20 தொடரின் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு ஒருநாள் தொடரில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் அஸ்வின்போன்ற வீரர்கள் தேவை என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் டெல்லி அணியின் மற்றொரு வீரரான ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றியும் தனது கருத்தினை அளித்திருந்தார். ஐ.பி.எல் அணிகளை சார்ந்த ஒரு உரிமையாளர் இந்திய அணி வீரர்கள் குறித்தும் அதன் தேர்வுமுறைகள் குறித்தும் பேசுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -