- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உம்ரான் மாலிக்கை இதனால தான் கழற்றி விட்டோம்.. கம்பேக் கொடுக்க அதை செஞ்சாகனும்.. பராஸ் மாம்ப்ரே அட்வைஸ்

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் இந்திய அணியிலிருந்து வந்த வாக்கிலேயே வெளியேறி விட்டார் என்றே சொல்லலாம். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் 145 – 150 கி.மீ வேகத்தில் வீசியதால் அனைவரது கவனத்தைப் பெற்ற அவர் பெரிய அளவில் வருவார் என பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டினர்.

அந்த பாராட்டுக்கு மத்தியில் 2022 அயர்லாந்து தொடரில் அறிமுகமான உம்ரான் மாலிக் அதிரடியான வேகத்தில் வீசினார். ஆனால் அதற்கு நிகராக ரன்களையும் வாரி வழங்கிய அவர் உடனடியாக கழற்றி விடப்பட்டார். அதைத் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு நன்றாக விளையாடியதால் மீண்டும் 2023 இலங்கை, நியூசிலாந்து தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

கம்பேக் கொடுக்க:
அதில் ஓரளவு நன்றாக செயல்பட்டு விக்கெட்டுகளையும் எடுத்த உம்ரான் மாலிக் தொடர்ந்து அசத்துவார் என்று நம்பப்பட்டது. ஆனால் 2023 ஐபிஎல் தொடரில் மீண்டும் ரன்களை வாரி வழங்கியதால் அத்தோடு தேர்வுக் குழுவினர் அவரை மொத்தமாக கழற்றி விட்டனர். இந்நிலையில் பந்து வீச்சில் அதிரடியான வேகத்தை கொண்டிருக்கும் உம்ரான் மாலிக் அதற்கு தகுந்த கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை என பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.

அதனால் கேப்டனின் நம்பிக்கையை இழந்த உம்ரான் மாலிக் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று முன்னேற வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விடைபெற்ற இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர் தனக்குள் திறமையை கொண்டவர். அவரைப் போன்ற அதிரடியான வேகத்தை கொண்டிருப்பது மிகவும் அரிதானது”

- Advertisement -

“இருப்பினும் 145 – 148 கி.மீ வேகத்தில் வீசும் போது அது 160 கிலோ மீட்டராக காண்பிக்கப்பட்டது உண்மை என்று நான் நினைக்கவில்லை. அதே சமயம் வேகம் தான் அவருடைய பலம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அந்த வேகத்தில் தொடர்ந்து வீசுவது நல்லது. அதை அவர் செய்தார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் வேகத்தை கொண்டிருக்கும் உங்களிடம் கட்டுப்பாடு இல்லையென்றால் தடுமாறுவீர்கள்”

இதையும் படிங்க: இதனால தான் சண்டை போட்டோம்.. அதுக்காக நாங்க எதிரியில்ல.. அமித் மிஸ்ராவுக்கு நவீன்-உல்-ஹக் பதிலடி

“அப்படி ஒருமுறை நீங்கள் தடுமாறினால் கேப்டனிடம் நம்பிக்கையை இழந்து விடுவீர்கள். எனவே அந்த கட்டுப்பாடு ரஞ்சிக்கோப்பையில் விளையாடினால் மட்டுமே உங்களால் பெற முடியும். அதனாலேயே நாங்கள் அனைத்து வீரர்களையும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு தள்ளுகிறோம். ஏனெனில் அங்கே விளையாடி அனுபவத்தை பெறும் போது உங்களால் அழுத்தமான சூழ்நிலைகளிலும் திறனை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்” என்று கூறினார்.

- Advertisement -