இனி இவருக்கு அணியில் இடம் இல்லையா? விராட் கோலியின் பேச்சால் எழுந்த சர்ச்சை – விவரம் இதோ

Kohli-2
- Advertisement -

இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை வைத்து பம்பரம் விளையாடிக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். ஆம் கடந்த இரண்டு வருடமாக இந்திய அணி செல்லும் இடத்திற்கெல்லாம் அவரை அழைத்துச் சென்றது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து என அனைத்து நாட்டிலும் அவர் ஆடினார் .

Pant 1

- Advertisement -

ஆனால் சமீப காலமாக எதிர்பார்த்தபடி அவரால் ஆட முடியவில்லை. அவரை கிடப்பில் போட்டுவிட்டு புதிதாக வித்தியாசமாக ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகிறது இந்திய அணி. மேலும், சமீபத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் மற்றும் பினிஷிங் வேலையையும் செய்தார். இதன் காரணமாக பன்ட்டின் கிரிக்கெட் கேள்விக்குறியாகி உள்ளது . இதனை உறுதிப்படுத்தும் விதமாக விராட் கோலி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் சில துணுக்குகளை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

ரோஹித் சர்மா அணியில் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது, இதனால் கிடைக்கும் வாய்ப்பை இளம் வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய புதிய இளைஞர்கள் களம் இறங்குவார்கள் . கேஎல்.ராகுல் விக்கெட் கீப்பர் பணியையும், பினிஷிங் வேலையும் செய்வார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Pant-1

இது சாதாரணமாக அணியை கட்டமைத்த அவர்களுக்கு எளிதாக தெரியலாம். ஆனால் ரிஷப் பண்ட்-ஐ மனதில் வைத்துப் பார்த்தால் இது அவருக்கு சற்று கடினம் தான். ஆனால் 3வது இடத்தில் விராட் கோலியும் 4வது இடத்தில் ஐயரும் இறங்கினால் 5வது இடத்தில் லோகேஷ் ராகுல் இறங்குவார். அவர் கீப்பிங் பணியையம் நன்றாக செய்துவிட்டால் ரிஷப் ப்ந்திதற்கு வேலையே இல்லாமல் போய்விடும்.

இப்படி பார்த்தால் இன்னும் சில ஆண்டுகள் அவர் அணியில் இடம் பிடிப்பது சற்று கடினம் தான். மேலும், டி20 உலகக் கோப்பை தொடருக்கு அவர் தயாராகி விட்டால் நன்றாக இருக்கும். இல்லை எனில் கேஎல் ராகுல் அந்த இடத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு ரிஷப் பண்ட்டின் கதவை அடைத்துவிடுவார் என்று தெரிகிறது.

Advertisement