ஒரே நாளில் என்னால் தோனி ஆகிவிட முடியாது – ரிஷப் பண்ட் ஓபன் டாக்

Pant

தோனிக்கு அடுத்ததாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தற்போது ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். தோனியின் மாற்று வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் 21 வயதில் வாய்ப்பு பெற்று அவர் அதிர்ஷ்டத்தால் விளையாடி வருகிறார் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பண்ட் கூறியதாவது :

Pant

நான் எதையும் இலவசமாக பெற்று இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை எனது திறமை மூலமாகவே எனது வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். சில வீரர்களுக்கு முன்னதாக வாய்ப்பு கிடைப்பது என்பது சிறப்பான ஒன்று. அதை நானும் பெற்றுள்ளேன் என்னுடைய இடத்தை யாரும் பரிசாக எனக்கு அளிக்க வில்லை. அப்படி பரிசாக அளித்து இருந்தால் தேர்வாளர்கள் கண்ணில் நான் பட்டிருக்கமாட்டேன்.

நான் என்னுடைய இடத்தினை நியாயப்படுத்த வேண்டும். என்னுடைய ஆட்டத்தின் மூலமே நான் எனது இடத்தைப் பெற்றேன். தோனியை எனது ஆலோசகராக நான் பார்க்கிறேன். பல நேரங்களில் தோனியின் வார்த்தைகள் சில நல்ல யோசனைகளை எனக்கு அளிக்கும். நான் பேட்டிங் செய்யும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் அந்த போட்டியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தோனி எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

Pant

மேலும் ஒரே நாளில் தோனியின் எல்லா விடயங்களும் நான் கற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் எனக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது. அவரைப் போல நான் செயல்பட இன்னும் சில போட்டிகளும் சில ஆண்டுகாலம் தேவைப்படும். எனவே என்னால் தோனியுடன் ஒப்பிட்டுப் பேச முடியாது எனது ஆட்டம், அவரது ஆட்டம் எப்போதும் வேறுதான்.அவரது வழியை பின்பற்றி அவரது இடத்தை நிரப்ப முயற்சிப்பேன் என்று பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.