தமிழர்கள் பாசக்காரங்கனு கேள்வி பட்டிருக்கேன். ஆனா இப்போ பாத்துட்டேன். சென்னை ரசிகர்கள் குறித்து – உருகிய பண்ட்

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 15-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Pant 1

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 71 ரன்களை குவித்து அசத்தினார். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பண்ட் ரசிகர்களிடையே கடுமையாக கேலி செய்யப்பட்டார். மேலும் எந்த மைதானத்துக்கு சென்றாலும் தோனி தோனி என்று ரசிகர்கள் கோஷமிட்டு அவரை வெறுப்பேற்றியும் வந்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னை ரசிகர்கள் முழுவதும் ரிஷப் பண்ட்க்கு போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே தங்களது ஆதரவை அளித்து இருந்தனர். அதன்படி போட்டி துவங்குவதற்கு முன்னரே பண்டின் புகைப்படத்தை பேனராக கொண்டு வந்த ரசிகர்கள் அவரின் பெயரை சொல்லியும் பண்ட், பண்ட் என்று மைதானத்தில் கோஷங்களை எழுப்பி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

Pant

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த அவர் கூறியதாவது : நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். ஆனால் கடந்த பல போட்டிகளாக அது முடியாமல் போனது. தற்போது நான் அதிலிருந்து கற்ற பாடத்தினால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எனது பேட்டிங்கை மாற்றி வருகிறேன். இனி வரும் நாட்களில் நான் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன்.

Pant 2

மேலும் சென்னையில் எனக்கு கிடைத்த ஆதரவு என்னை நெகிழ வைக்கிறது. சென்னை ரசிகர்கள் எனக்கு கொடுத்த இந்த ஆதரவிற்கு எனது நன்றியை மனதார தெரிவித்து கொள்கிறேன். உண்மையில் இவர்கள் கொடுத்த ஆதரவினால் இன்று மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று பண்ட் நெகிழ்ச்சியாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement