அஷ்வினுக்கு ஐடியா கொடுத்த ரிஷப் பண்ட். விக்கெட்டும் விழுந்தாச்சு – தோனியை கண்முன் நிறுத்திய சம்பவம்

Ashwin-3
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பாக்சிங் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது முதல் நாள் ஆட்டநேரம் முடிவதற்கு முன்பாக தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Ashwin

- Advertisement -

அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி இளம் வீரரான மார்னஸ் லாபுஷேன் 48 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 38 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அறிமுக வீரர் முகமது சிராஜ் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் சகாவிற்க்கு பதிலாக அணியில் சேர்க்கப் பட்டுள்ள ரிஷப் பண்ட் இன்று கீப்பிங்கில் அசத்தலாக செயல்பட்டார். அவ்வப்போது பந்துவீச்சாளர்களுக்கு அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கி கொண்டே இருந்த அவர் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றவாறு பந்துவீச்சாளர்களிடம் சில ஆலோசனைகளையும் வழங்கி கொண்டே இருந்தார். அந்த வகையில் அஸ்வின் பந்து வீசி கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் மேத்யூ வேட் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார்.

wade

அப்போது அஷ்வினிடம் “அவர் அடிக்கப் போகிறார் பந்தினை சற்று உள்ளே போடுங்கள்” என இந்தியில் அவர் “அந்தர் ஹை ரக்னா யே மாறேகா” என்று கூறினார். உடனே பந்தை உள்நோக்கி அஸ்வின் வீச பண்ட் நினைத்தது போலவே அந்த பந்தை மேலே அடித்தார் வேட். இறுதியில் மேலே சென்ற அந்த பந்து ஜடேஜா கையில் தஞ்சம் அடைந்தது. பண்டின் இந்த செயல்பாடு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்த விக்கெட் குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போட்டியில் பண்டின் செயல்பாடு அனைத்தும் ரசிகர்களை கவரும் விதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தோனி இதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி விக்கெட் வீழ்த்திய நிலையில் தற்போது அவரது வழியை பின்பற்றி ரிஷப் பண்ட் ஆலோசனை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement