பண்ட் இப்படியே தொடர்ந்தால் குல்தீப் யாதவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் – எச்சரிக்கும் ரசிகர்கள்

Pant
- Advertisement -

தோனிக்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இடம்பெற்று விளையாடி வருபவர் இளம் வீரர் ரிஷப் பண்ட். தொடர்ந்து பல தொடர்கள் ஆகவே சொதப்பி வரும் பண்ட் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பண்ட் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதன்பிறகு அவர் மோசமாக பேட்டிங் செய்து வந்தாலும் அவர் இளம்வீரர் என்பதாலும், அடுத்த இந்திய அணியின் கீப்பராகவும் மாற்றுவதற்காகவும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Pant

- Advertisement -

ஆனால் அறிமுகமான தொடரில் இருந்தே பண்ட்டின் விக்கெட் கீப்பிங் மோசமாக இருந்தது பிறகு நாளடைவில் சரியாகும் என்று நினைத்தால் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே தான் வருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி சற்று சுமாராக விக்கெட் கீப்பிங் செய்தாலும் முதல் மற்றும் கடைசி போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் படுமோசமாக இருந்தது. அதிலும் குறிப்பாக நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏகப்பட்ட தவறுகளை விக்கெட் கீப்பிங் ரிஷப் பண்ட் செய்தார் .

Pant-4

மேலும் ரசிகர்கள் ரிஷப் பண்ட்டின் இந்த தவறான விக்கெட் கீப்பிங்கின் மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கு காரணத்தையும் அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன்படி ஸ்டம்பின் பின்னால் இருந்து தோனி கொடுக்கும் அறிவுரையின் பேரில் குல்தீப் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் ஸ்டம்பிங், கேட்ச் என அதிக விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்த தோனி முக்கிய காரணமாக இருந்தார்.

Pant 3

ஆனால் பண்ட் நேற்று குல்தீப்பின் பந்துகளை பிடிக்க தவறினார். மேலும் ஸ்டம்பிற்கு பின்னல் சில கேட்சுகளையும் தவறவிட்டார். இதே போன்று தொடர்ந்து பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வாராயின் குல்தீப் பந்து வீசுவது என்பது கடினமாகி விடும். மேலும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்றும் கிண்டலாக பதிவிட்டுள்ளனர். மேலும் விரைவில் பண்டிற்கு விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை வழங்குங்கள் அல்லது விக்கெட் கீப்பரை மாற்றங்கள் என்றும் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்ட வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement