ரிஷப் பண்ட் செய்த பெரிய தவறு. கடைசி ஓவரில் வெற்றியை தவற விட்ட டெல்லி அணி – இதை நோட் பண்ணீங்களா?

Dc

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 14-வது ஐபிஎல் தொடருக்கான இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக தவான் 36 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் குவித்தனர். மற்றபடி எந்த ஒரு இடத்திலும் டெல்லி அணி வீரர்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் போனது.

dcvskkr

கொல்கத்தா அணி சார்பாக வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், பெர்குசன் மற்றும் மாவி ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்நிலையில் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவர்களில் 96 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி 16-ஆவது ஓவரின் முடிவில் 123 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

- Advertisement -

இந்நிலையில் மீதமுள்ள 13 ரன்களை விரைவாக அடித்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. அதிலும் குறிப்பாக கடைசி 20ஆவது ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஷ்வின் பந்து வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் த்ரிப்பாதி சிங்கிள் எடுக்க 2-வது பந்தை டாட் பால் ஆக்கிய ஷாகிப் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

tripathi 1

4-வது பந்தில் சுனில் நரேனும் ஆட்டமிழக்க இரண்டு பந்துகளுக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டது. அந்நிலையில் ஐந்தாவது பந்தில் த்ரிப்பாதி சிக்சர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியின் கடைசி ஓவரில் இரண்டு பந்துகளுக்கு 6 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் நிச்சயம் டெல்லி அணி ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிர்ஷ்டவசமின்றி இறுதியில் அந்த அணி தோல்வியை தழுவியது அவர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது.

- Advertisement -

tripathi

இந்நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் செய்த பெரிய தவறு காரணமாகவே டெல்லி அணி தோல்வியை சந்தித்துள்ளதாக ரசிகர்கள் தங்களது சமூக வலைதளம் மூலமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் ஷார்ஜா போன்ற சிறிய மைதானத்தில் ஸ்பின்னர்களின் ஓவர்களை முன்கூட்டியே வீசி முடிக்க வைக்க வேண்டும். ஆனால் இலக்கு சிறியதாக இருந்ததால் ரிஷப் பண்ட் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களையும் முன்கூட்டியே பயன்படுத்தி விட்டார்.

இதையும் படிங்க : முக்கிய பொறுப்பிற்காக அழைப்பு விடுத்த பி.சி.சி.ஐ – ஏற்க மறுத்த ராகுல் டிராவிட் – விவரம் இதோ

இதன் காரணமாக கடைசி ஓவரை வேறு வழியின்றி அஷ்வின் வீச வேண்டியதாயிற்று. கடைசி ஓவரில் ஸ்பின்னர்கள் வீசும்போது எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. ஒருவேளை முன்கூட்டியே அஷ்வின் ஓவரை முடித்து கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளரை வீச வைத்திருந்தால் இப்போட்டியில் ஒரு திருப்புமுனை இருந்திருக்கும் எனவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement