முக்கிய பொறுப்பிற்காக அழைப்பு விடுத்த பி.சி.சி.ஐ – ஏற்க மறுத்த ராகுல் டிராவிட் – விவரம் இதோ

Dravid
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து கடந்த பல ஆண்டுகளாகவே ரவி சாஸ்திரி இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு பல தொடர்களை கைப்பற்றி இருந்தாலும் ஐசிசி கோப்பையை வெல்ல வில்லை என்ற குறை மட்டுமே அவரின் மீதும், கேப்டன் விராட் கோலியின் மீதும் உள்ளது.

Shastri

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நவம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக உள்ளார். இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான பிசிசிஐ தற்போது புதிய பயிற்சியாளரை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி வெளிநாட்டு பயிற்சியாளர்களை விரும்பாத பிசிசிஐ தலைவர் கங்குலி நிச்சயம் இந்திய அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர்களில் ஒருவரே பயிற்சியாளராக வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ஏற்கனவே லட்சுமணன், கும்ப்ளே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்ற தகவல்களும் வெளியாகிய நிலையில் தற்போது இந்திய அண்டர் 19 அணியையும், இந்திய ஏ அணியையும் பயிற்றுவித்த ராகுல் டிராவிட்டுக்கு இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளராக பொறுப்பேற்க பிசிசிஐ தலைமையில் இருந்து அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

Dravid

ஆனால் டிராவிட் அந்த வாய்ப்பினை தேவையில்லை என்றும் நான் பயிற்சியாளராக செயல்பட விரும்பவில்லை என்றும் அந்த பதவியை மறுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் டிராவிட் ஏன் இந்த பதவியை ஏற்க மறுத்தார் ? என்ற தகவல் வெளியாகவில்லை என்றாலும் பயிற்சியாளராக விருப்பம் இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

Dravid

தற்போது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் டிராவிட் கங்குலியுடன் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி நெருங்கிய நட்பு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த ஐ.பி.எல் தொடரின் இரண்டாம் பாதி ஆரம்பிப்பதற்கு முன் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட டிராவிட் தற்போது அந்த பதிவியினை மறுத்துள்ளது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement