RR vs DC : கங்குலி என்னை தூக்கியதும் என் மனதில் இவையே நினைவுக்கு வந்தன- பண்ட் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

Pant-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ரஹானே 63 பந்தில் 105 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித் 50 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக பண்ட் 36 பந்தில் 78 ரன்களை அடித்தார். தவான் 27 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.

Pant

போட்டி முடிந்து பண்ட் கங்குலி குறித்து பேசியதாவது : இந்த போட்டியை நான் வெற்றிகரமாக முடித்து மனத்திற்கு மகிழ்ச்சியை அளித்தது. எப்போதும் நமது பங்களிப்போடு நமது அணி வெற்றி அடைந்தால் கிடைக்கும் சுகம் என்பது கொஞ்சம் அதிகமாக இருக்கும். நான் வெற்றிக்கு தேவையான ரன்னை சிக்ஸராக அடித்துவிட்டு பெவிலியன் நோக்கி வந்தேன். அப்போது கங்குலி மிகுந்த மகிழ்ச்சியோடு என்னை நோக்கி வந்தார்.

Pant-1

என்னை வாழ்த்தவே வந்தார் என்று நான் கைகொடுத்தேன். ஆனால், அவர் என்னை தூக்கி வெற்றியை கொண்டாடினார். 300 க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகள், ஏகப்பட்ட போட்டிகளுக்கு இந்திய அணிக்காக கேப்டன்சி பண்ணிய கங்குலி என்னை தூக்கிய போது முதன் முறையாக சாதனை புரிந்தது போல உணர்ந்தேன் என்றும், வானத்தில் பறப்பது போலவும் இருந்தது என்று பண்ட் கூறினார்.

Advertisement