தோனி, கோலி என 2 பேர் கூடவும் விளையாடியாச்சு. ஆனா இவரது தலைமையில் தான் நான் சூப்பர் – பாண்டியா வெளிப்படை

Pandya
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஆன ஹர்டிக் பாண்டியா கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். அதிலிருந்து இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 54 ஒருநாள் போட்டிகள், 40 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.

Pandya 1

- Advertisement -

அவர் அறிமுகமான போது இந்திய அணியில் தோனி கேப்டனாக இருந்தார். ஆனாலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய காரணத்தினாலே இந்திய அணிக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் அறிமுகம் ஆனதில் இருந்து இந்திய அணிக்கு தனது சிறப்பான ஆட்டத்தை வழங்கிவரும் ஹர்டிக் பண்டியா தற்போது இந்திய அணி வீரர்களின் முக்கிய நபராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தான் விளையாடியதிலேயே சிறந்த கேப்டன் குறித்து தனது கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி 2015ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

pandya-brothers

ரோகித் சர்மா தலைமையின் கீழ் தான் விளையாடியபோது தனக்குள் இருக்கும் திறமைகள் முழுமையாக வெளிவந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் எப்பொழுதும் ரோகித் சர்மாவுடன் விளையாடுவதை ரசிக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த கேப்டனாக இருந்து வருகிறார். நாங்கள் விளையாட்டைப் பற்றி விளையாட்டைப் பற்றி அதிகம் பேசியது கிடையாது. ஆனால் அவர் எனது சிறந்த விளையாட்டை அவரது தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறேன்.

- Advertisement -

மேலும் அதே போன்று இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஒரு வித்தியாசமான வீரர் என்றும் அவர் அமைதியானவர், அறிவானவர் என்றும் அவரை புகழ்ந்துள்ளார். மேலும் நாங்கள் ஒன்றாக இருக்கும்போது அதிக அளவு வெற்றிகளைப் பெற்று உள்ளோம். அந்த வெற்றியை உண்மையாக பகிர்ந்து கொண்டோம் என்றும் பாண்டியா கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இவர்கள் இருவரும் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Pandya

தற்போது மூன்று விதமான சர்வதேசப் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். உலகின் நம்பர்-1 ஆக பும்ராவும், தலை சிறந்த ஆல்ரவுண்டராகவும் பாண்டியாவும் தற்போது அறியப்பட்டு வருகின்றனர். காயம் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு பாதி ஆட்டத்தை தவறவிட்ட பாண்டியா தற்போது மீண்டும் முழு உடல் தகுதியுடன் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பை எதிர்பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement