என்னோட 2 ஆவது ஐ.பி.எல் லயே நான் 6-7 கோடிக்கு ஏலம் போவேன்னு 2 பேர் சொன்னாங்க – பாண்டியா ஓபன்டாக்

Pandya6
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன் மூலம் 2016 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 92 ஐபிஎல் போட்டிகள், 54 டி20 போட்டிகள், 63 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் தான் ஆரம்ப காலகட்டத்தில் ஐபிஎல் அணிக்கு தேர்வானது குறித்தும் தனது இரண்டாவது ஐபிஎல் தொடரின்போது இந்திய வீரர்கள் இருவர் அவரது ஏலத் தொகை குறித்து கூறியது போன்ற சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

pandya-brothers

- Advertisement -

2015ஆம் ஆண்டு ஹார்டிக் பாண்டியா முதல் முறையாக ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 10 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். அந்த ஆண்டு ஆல்-ரவுண்டராக தனது ஆட்டத்தை விளையாடிய அவர் 112 ரன்களும் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக அடுத்து ஜனவரி மாதமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக அவர் களமிறங்கினார். அதன் பிறகு இந்திய அணியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பும் அவருக்கும் கிடைத்தது.

இந்நிலையில் அந்த சர்வதேச கிரிக்கெட்டின் அறிமுகத்திற்கு பிறகு என்ன நடந்தது என்பது குறித்து பாண்டியா கூறுகையில் : நான் முதல் ஐபிஎல் தொடரில் 10 லட்ச ரூபாய்க்கு தேர்வானேன். ஆனால் அடுத்த ஆண்டே இந்திய அணிக்காக அறிமுகமாகிய பின்னர் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. அவர்கள் என்னிடம் வந்து நிச்சயம் இந்த ஆண்டு நீ 6-7 கோடி ரூபாய்க்கு ஐபிஎல் ஏலத்தில் செல்வாய் என்று கூறினார்கள். ஏனெனில் அப்போது நான் இந்திய அணிக்காக ஆல்-ரவுண்டராக சிறப்பாக விளையாடி இருந்தேன் என்று ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார்.

hardik

மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் : நான் பத்து லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட போது என்னுடைய சகோதரர் க்ருனால் 2 கோடி ரூபாய்க்கு மும்பை அணியை வாங்க பட்டார். பின்னர் எங்களது ஆட்டம் சிறப்பாக அமைய 2017ஆம் ஆண்டு வாக்கில் நாங்கள் மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வென்று இருந்தோம். அந்த தொடரில் நான் 250 ரன்கள் அடித்தது மட்டுமின்றி 6 விக்கெட்டுகளையும், அதேபோல் க்ருனால் 243 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தால் அதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு நாங்கள் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு எங்களது சம்பளம் அதிகரித்தது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி, ரோஹித் சர்மா இடத்தை எதிர்காலத்தில் நிரப்பப்போவது இவர்கள் தான் – ரிக்கி பாண்டிங் கணிப்பு

அப்போது நான் 11 கோடியும், க்ருனால் 9 கோடியும் வாங்கினோம். மொத்தமாக 20 கோடி எங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அப்போது கூட நாங்கள் மிகவும் இயல்பாகவே இருந்தோம், பெரிய அளவு ஆச்சரியப்படவில்லை. மேலும் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் அதோடு நிறைய விடயங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது என்றும் இப்போது இருப்பது போன்றே எப்போதும் இருக்க வேண்டும் பணம் மட்டும் தான் நம்முடன் கூடுதலாக இணைந்துள்ளது என்று நினைத்து கொண்டதாக பாண்டியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement