விராட் கோலி, ரோஹித் சர்மா இடத்தை எதிர்காலத்தில் நிரப்பப்போவது இவர்கள் தான் – ரிக்கி பாண்டிங் கணிப்பு

Ponting
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு முறை ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பையை வென்று கொடுத்த அனுபவம் வாய்ந்த வீரரான பாண்டிங் இளம் வீரர்களை சரியாக கண்டறிவதில் மிகவும் திறமையானவர். அந்த வகையில் அவரது பயிற்சியின் கீழ் பல திறமையான இளம் வீரர்கள் தற்போது வளர்ந்து வந்துள்ளனர் என்றே கூறலாம்.

Ponting

அப்படி அனுபவம் பெற்ற ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை இப்போதிலிருந்தே தயார் செய்ய வேண்டும் என்றும் அதில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி இந்தியாவில் வளர்ந்து வரும் இளம் வீரர்கள் குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடக்கூடிய திறமையான வீரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக சீனியர் வீரர்கள் தங்களது இடத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இளம் வீரர்கள் அட்டகாசமாக செயல்படும்போது சீனியர் வீரர்களுக்கு நெருக்கடி உண்டாகும். ஹர்திக் பாண்டியா தற்போது உடல் தகுதியுடன் இல்லாததால் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம்.

Harshal-2

தற்போதுள்ள இந்திய அணியில் ரோஹித் மற்றும் விராட் கோலி இல்லாத காலத்தில் நிச்சயம் நான் குறிப்பிடும் 5 வீரர்கள் எதிர்காலத்தில் ஜொலிப்பார்கள். அந்தவகையில் பிரித்வி ஷா, வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல், ஜெய்ஷ்வால் ஆகியோர் இந்திய அணியின் அடுத்த ஜெனரேஷன் சூப்பர் ஸ்டார் வீரர்களாக மாறுவார்கள். அதுமட்டுமின்றி சீனியர் வீரர்கள் இடத்தை நிரப்ப போவதும் அவர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார்

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி டி20 போட்டி : இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்கள் – பிளேயிங் லெவன் இதோ

அதோடு இந்திய அணியின் பயிற்சியாளராக வரும்படி தனக்கும் அழைப்பு வந்ததாகவும் ஆனால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியாது என்பதாலும் இந்தியாவிலேயே 300 நாள் கிட்டதட்ட செலவாகும் என்பதனாலும் தான் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement