அந்த பையனுக்கு பயமில்ல..! புகழ்ந்து தள்ளிய கோலி..! – வெற்றிக்கு காரணம் இதுதான்..? – யார் தெரியுமா..?

Hrdhik
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரை இந்திய அணிய 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹார்திக் பாண்டியவை இந்திய அணியின் கேப்டன் கோலி வெகுவாக பாராட்டியுள்ளார்.
pandiya
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்த நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டி நேற்று (ஜுலை 8) இங்கிலாந்தில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடியில் 198 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி 103-2 என்று இருந்த போது இந்திய பந்து வீச்சாளர் பாண்டியா தொடர்ந்து 4 விக்கெட்டை வீழ்த்தினார் இதனால் அந்த அணி 181-6 என்ற நிலையில் தள்ளப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பாண்டியா 14 பந்துகளில் 33 ரன்களை குவித்தார்.
pandiya1
இந்த போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி “ஹர்திக் பாண்ட்யா சிறந்த ஆல்ரவுண்டர். அதை இன்றைய போட்டியில் சிறப்பாக வெளிப்படுத்தினார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவர் திறமை மீது அதிக நம்பிக்கைக் கொண்டவர். என்ன தேவை என்பது அவருக்கு தெரியும், விக்கெட்டுகளை வீழ்த்தியும் பவுண்டரியும் சிக்சருமாக விளாசியும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.” என்று பாண்டியவை பாராட்டியுள்ளார்.

- Advertisement -
Advertisement