ஹார்டிக் பாண்டியாவின் வாய்ப்பு இவரால் தான் பறிபோனது – விவரம் இதோ

Pandya

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

Pandya

உலகக் கோப்பை தொடர் முடிந்து காயம் காரணமாக சில மாதங்களாக ஹார்டிக் பாண்டியா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து முடிந்த தொடரில் கூட ஹார்டிக் பாண்டியா காயத்திலிருந்து முழுவதுமாக மீண்டு வராததால் அவர் அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு தற்போது முழுவதும் குணம் அடைந்த பாண்டியா தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய டெஸ்ட் அணியில் பாண்டியாவின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

pandya 2

அதற்கு முதற்காரணம் யாதெனில் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் விகாரி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் ரவீந்திர ஜடேஜாவும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கான இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஹர்டிக் பண்டியா இந்த தொடரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -