- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விவாகரத்திற்கு பிறகு தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடாஷா – அதற்கு பாண்டியா போட்ட கமெண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா மற்றும் நடாஷா ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்களது இல்வாழ்க்கையில் இருந்து பிரிந்து தனித்தனியாக பயணிப்பதாக அறிவித்திருந்தனர். இதுகுறித்து ஹார்டிக் பாண்டியா வெளியிட்டிருந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : கடந்த நான்கு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த நிலையில் தற்போது நானும் நட்டாஷாவும் பிரிந்து செல்ல முடிவு செய்து இருக்கிறோம். எங்கள் இருவரது வாழ்க்கைக்கும் இதுதான் நல்லது என்றும் நாங்கள் நம்புகிறோம்.

பரஸ்பர மரியாதை, தோழமை, மகிழ்ச்சியை அனுபவித்த நாங்கள் எடுத்த கடினமான முடிவு இது. எங்களது மகன் அகஸ்த்தியா இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அவருடைய மகிழ்ச்சிக்காக பெற்றோர்களாக நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று உறுதி அளிக்கிறோம்.

- Advertisement -

இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து ஹார்டிக் பாண்டியாவிற்கு ஆதரவாக ரசிகர்களும் ஆறுதல் கூறி வந்தனர். அதோடு ஹார்டிக் பாண்டியாவை பிரிந்த நட்டாஷா தனது மகனுடன் செர்பியா நாட்டிற்கு புறப்பட்டார். கடந்து 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர்கள் நான்கு ஆண்டுகளிலேயே தங்களது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டனர்.

இதற்கிடையே சொந்த வாழ்க்கையில் என்ன பிரச்சனை இருந்தாலும் இந்திய அணிக்காக விளையாடுவதற்காக தற்போது இலங்கை சென்றுள்ள ஹார்டிக் பாண்டியா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது குடும்ப பிரச்சினை காரணமாகவே அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதாவிற்கு டி20 கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தனது மகனுடன் செர்பியா சென்ற நடாஷா தற்போது அங்குள்ள தீம் பார்கில் தனது மகனுடன் பொழுதினை கழித்து வருகிறார். மேலும் அந்த பூங்காவில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் நடாஷா வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்திற்கு ஹார்டிக் பாண்டியா கமெண்ட் செய்துள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : விரைவில் கேன் வில்லியம்சனை காலி செய்து டெஸ்ட் ரேங்கிங்கில் சாதனை நிகழ்த்த இருக்கும் ஜோ ரூட் – விவரம் இதோ

அந்த வகையில் நடாஷா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ள பாண்டியா : சிகப்பு நிற ஹார்டின் எமோஜியினையும், ஓகே ஹேன்ட் போன்ற எமோஜியையும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த கமெண்ட் குறித்த தகவல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -