இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜோ ரூட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 178 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி அந்த போட்டியில் வெற்றியும் பெற்றது.
அதோடு அவர்கள் பெற்ற இந்த வெற்றியின் மூலம் நடைபெற்று வரும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதேபோன்று இந்த போட்டியில் மற்றொரு இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஹாரி ப்ரூக்கும் சதம் அடித்து அசத்தியிருந்தார்.
இதனால் இருவருமே தற்போது வெளியாகியுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேற்றத்தை கண்டுள்ளனர். மேலும் வெறும் ஏழு புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கும் கேன் வில்லியம்சனையும் ஜோ ரூட் பின்னுக்கு தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
விரைவில் துவங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை ஜோ ரூட் வெளிப்படுத்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேன் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. தற்போது கேன் வில்லியம்சன் 859 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
அவரை தொடர்ந்து ஜோ ரூட் 852 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோன்று நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மற்றொரு முன்னணி வீரரான ஹாரி புரூக் 4 இடங்கள் முன்னேறி தற்போது 771 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பாபர் அசாம் ஒரு இடம் சரிந்து நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் கருணையே இல்லாமல் அடிச்சி அந்த சாதனை நிச்சயம் படைப்போம் – இங்கிலாந்து வீரர் போப் பேட்டி
இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா ஏழாவது இடத்திலும், ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்திலும், விராட் கோலி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோன்று வளர்ந்து வரும் நட்சத்திர இளம் வீரரான சுப்மன் கில் 20-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



