தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டர்களுக்கு பரிசளித்த ஹார்டிக் பாண்டியா – வைரலாகும் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆன ஹார்திக் பாண்டியா மற்றும் செர்பிய மாடல் அழகியான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த வருட புத்தாண்டு முதல் தேதியன்று துபாயில் நடுக்கடலில் மோதிரம் மாற்றிக் கொண்ட அவர்கள் விரைவிலேயே தாங்கள் குழந்தை பெற இருப்பதாகவும் அறிவித்திருந்தனர்.

Natasa

மேலும் அதன் பின்னர் இருவருக்கும் வெகு எளிமையாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு அவர்கள் கூறியது போலவே ஜூலை 30ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தை பிறந்ததை சமூக வலைத்தளம் மூலம் புகைப்படத்துடன் அறிவித்தனர்.

அவரின் அந்த பதிவிற்கு சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது ஹார்டிக் பாண்டியா மருத்துவமனையில் அவரது அவர் மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கேக் ஒன்றை வெட்டி கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்த படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஹார்டிக் பாண்டியா மேலும் அதில் “என்னுடைய குழந்தையை இந்த உலகத்திற்கு காட்டிய இந்த மருத்துவர்களுக்கு நன்றி”, “எப்பொழுதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -