என்கிட்ட என்ன சொன்னாங்களோ அதைத்தான் செய்தேன். வேற ஒன்னும் இல்ல – பாண்டே அதிரடி

Pandey-2
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. ராகுல் மற்றும் தவான் ஆகியோர் அதிகபட்சமாக அரைசதம் அடித்தனர்.

rahul

- Advertisement -

அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பாக சைனி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்த போட்டியில் இறுதிக்கட்டத்தில் தாகூருடன் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்த மனிஷ் பாண்டேயை அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரன்குவிப்பிற்கு உதவினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாண்டே 18 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் குவித்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த மணிஷ் பண்டே கூறியதாவது : பயிற்சியாளர்கள் என்னிடம் ஆட்டம் விக்கெட் சரிந்தால் போட்டியை நீ தான் எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறினார்கள்.

நானும் அதற்கு தயாராக இருந்தேன். அதைப்போன்றே எனக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ இறுதிநேரத்தில் தாகூருடன் சிறப்பான பங்களிப்பை அமைத்தேன். நான் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன் மேலும் சையத் முஷ்டக் அலி கோப்பையும் எனக்கு நன்றாக அமைந்தது.

Pandey 1

வலைப்பயிற்சியில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் பயிற்சிகளை மேற்கொள்கிறேன். எனவே எனது வாய்ப்பிற்காக நான் தயாராக இருந்தேன். இன்று வாய்ப்பு கிடைத்தது நான் அதனை செய்து முடித்தேன். வலைப்பயிற்சியிலும் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலும் நான் விளையாடி வருவது இந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாட உதவியது என்று பாண்டே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement