தோணியை பாராட்டிய பாக்.செய்தியாளர்…கடுமையாக கண்டிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் – காரணம் இதுதான் !

zainab
- Advertisement -

நேற்று நடந்த சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையேயான போட்டியில் சின்னசாமி மைதானத்தை தெறிக்கவிட்ட தோனிக்கு பல்வேறு பிரபலங்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் பாக்கிஸ்தான் ஒருவர் தோனியை பாராட்டி த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்ட பத்வால் பாகிஸ்தான் ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

Zainab-Abbas

- Advertisement -

இந்தியாவில் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL ) போன்றே பாகிஸ்தானிலும் பாக்கிஸ்தான் சூப்பர் லீக் (PSL ) என்று நடந்து வருகிறது. மேலும் இந்த போட்டிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தவர் பாகிஸ்தானை சேர்ந்த ஸைனப் அப்பாஸ். இவர் நேற்று இரவு சென்னை அணியின் வெற்றியை பார்த்து தோனியின் ஆட்டத்திற்கு தனது த்விட்டேர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் அவர் மீது கோவம் கொண்டு அவர் மீது சரமாரியான விமர்சனங்களை ட்விட்டரில் வைத்து வருகின்றனர்.

தோனியை பாராட்டி ட்வீட் செய்த ஸைனப் அப்பாஸின் பதிவிற்கு ரீ ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் “இந்தியர்கள் நமது நாட்டுடன் விளையடா மறுத்து வரும் போது எப்படி நீங்கள் அவர்களை (இந்தியர்களை ) பெருமையாக கூறலாம். பாகிஸ்தான் நாட்டின் பெருமையை விட உங்களின் தனிப்பட்ட விருப்பம் முக்கியமாக ஆகிவிட்டதா .இதற்கு நீங்கள் அசிங்கப்பட வேண்டும் ” என்று கூறியுள்ளார் .

 

- Advertisement -

https://twitter.com/i_mSajid/status/989236303593181186

மேலும் சில ரசிகர்கள் “பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட ஐபில் போட்டிகளில் இல்லை, அனால் நீங்கள் ஐபில்-க்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள் “என்றும் மற்றும் ஒரு ரசிகர் ” ஒரு கிரிக்கெட் செய்தியாளராக நீங்கள் இந்தியாவில் நடக்கும் ஐபில் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் இந்திய பத்திரிகையாளர்கள் ஒருவரும் இங்கே நடக்கும் PSL போட்டிகளை பற்றி கூறுவது இல்லை ” என்று பதிவிட்டுள்ளார் . இதனால் ஸைனப் அப்பாஸிற்கு நெருக்கடி பெருகி வருகிறது.

Advertisement