இந்தியா மறுபடியும் பாகிஸ்தானை அவமானப் படுத்திட்டாங்க.. ஐசிசி மீது பாக் வாரியம் அதிருப்தி

IND vs PAK 2
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் அத்தொடரில் உலகின் டாப் 20 அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகளுக்கு சவாலைக் கொடுத்து இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அந்த தொடருக்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனை நேற்று முன்தினம் ஆன்லைனில் துவங்கியது. அதற்கான அறிவிப்பை ஐசிசி தங்களுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பு சம்பந்தமான விளம்பர பதாகையில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ், ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சேல் மார்ஷ், இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள்.

- Advertisement -

விளம்பரத்தில் இல்லை:

அதே போல தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்கம், இலங்கை கேப்டன் தசுன் சனாகா ஆகியோரும் இடம் பிடித்துள்ளார்கள். அதைப் பார்த்த பாகிஸ்தான் வாரியம் தங்களுடைய அணியின் கேப்டன் சல்மான் ஆகா இடம் பெறாதது பற்றி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை இந்தியாவை சேர்ந்த நிறுவனம் வைத்திருந்தது.

அப்போது எல்லைப் பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் கேப்டனை புறக்கணித்த அந்நிறுவனம் மற்ற கேப்டன்களை மட்டும் வைத்து விளம்பரத்தை ஒளிபரப்ப திட்டமிட்டது. ஆனால் அப்போது ஆசியக் கவுன்சில் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி ஒளிபரப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனால் கடைசியில் பாகிஸ்தான் கேப்டனையும் சேர்த்து விளம்பரங்கள் வெளிவந்தன.

- Advertisement -

பாகிஸ்தான் அதிருப்தி:

அதே போல தற்போது இந்தியா தங்களை திட்டமிட்டு ஐசிசி விளம்பரத்தில் புறக்கணித்து அவமானப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் வாரியம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐசிசி அமைப்பின் தலைவராக இந்தியாவை சேர்ந்த ஜெய் ஷா இருந்து வருகிறார். எனவே வேண்டுமென்றே இந்தியா தங்களை அவமானப்படுத்தும் வகையில் விளம்பரத்தைத் தயாரித்துள்ளதாக பாகிஸ்தான் வாரியம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அண்டர்-19 ஆசியக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் எப்போது? எந்த சேனலில் பார்க்கலாம்.. வரலாற்று புள்ளிவிவரம்

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் வாரியத்தின் நிர்வாகி கூறுகையில். “சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆசியக் கோப்பையிலும் நாங்கள் இதே பிரச்சினையை சந்தித்தோம். இம்முறையும் ஒளிபரப்பாளர்கள் எங்களுடைய கேப்டன் இல்லாமலேயே விளம்பரத்தைத் துவங்கியுள்ளார்கள். ஆனால் இம்முறை நாங்கள் அதே பிரச்சனையை ஐசிசி அமைப்பிடம் சந்திக்கிறோம். அவர்களின் டிக்கெட் விளம்பரத்தில் எங்களுடையக் கேப்டனை காண்பிக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement