அண்டர்-19 ஆசியக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் எப்போது? எந்த சேனலில் பார்க்கலாம்.. வரலாற்று புள்ளிவிவரம்

IND vs PAK
- Advertisement -

அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாயில் டிசம்பர் 12ஆம் தேதி துவங்கியது. ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த இளம் வீரர்களை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரில் 8 அணிகள் விளையாடுகின்றன. அத்தொடரில் ஆயுஷ் மாத்ரே தலைமையில் விளையாடும் இந்திய அண்டர்-19 அணி தங்களது முதல் போட்டியில் அமீரகத்தை 234 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 433 ரன்கள் குவித்து அண்டர்-19 ஆசியக் கோப்பை வரலாற்றில் 400 ரன்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையைப் படைத்தது. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்சி 14 சிக்சர்கள் உட்பட 171 (95) ரன்கள் குவித்து மிரட்டினார். மேலும் ஒரு அண்டர்-19 ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார்.

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான்:

இதைத் தொடர்ந்து இந்திய அணி தங்களது அடுத்தப் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானை பொறுத்த வரை தம்முடைய முதல் போட்டியில் மலேசியாவை பந்தாடி 345 ரன்கள் குவித்தது. பின்னர் மலேசியாவை 48 ரன்களுக்கு சுருட்டி வீசிய பாகிஸ்தான் 297 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று அசத்தியது.

அதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. அப்போட்டி டிசம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துபாயில் இருக்கும் ஐசிசி அகடமி மைதானத்தில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து வெற்றி பெற பாகிஸ்தான் வெறித்தனத்துடன் விளையாட உள்ளது.

- Advertisement -

எந்த சேனலில் பார்க்கலாம்:

ஏனெனில் சீனியர் கிரிக்கெட்டில் 2025 ஆசியக் கோப்பையில் இந்தியாவை எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்தது. எனவே அதற்கு ஜூனியர் ஆசியக் கோப்பையில் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பாகிஸ்தானின் சவாலை எதிர்கொண்டு ஜூனியர் ஆசியக் கோப்பையிலும் வெற்றி பெற இந்திய அணி தயாராகியுள்ளது

இதையும் படிங்க: கெளதம் கம்பீர் சொல்ற அப்ரோச்சில் விளையாட.. எல்லா இந்திய பேட்ஸ்மேன்களும் ரெடி.. திலக் பேட்டி

வரலாற்றில் அண்டர்-19 ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் 27 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்தியா 15, பாகிஸ்தான் 11 வெற்றிகள் பெற்றன. 1 போட்டி சமனில் முடிந்தது. அதுவே ஆசியக் கோப்பையில் மோதிய 10 போட்டிகளில் இந்தியா 4, பாகிஸ்தான் 5 வெற்றிகள் பெற்றுள்ளன. 1 போட்டி சமநிலையில் முடிந்தது. இம்முறை நடைபெறும் போட்டியை இந்தியாவில் இருக்கும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். ஆன்லைன் மற்றும் மொபைலில் “சோனி லிவ்” ஆப் வாயிலாக பார்க்கலாம்.

Advertisement