தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இந்திய அணியின் தோல்வி. முடிவுக்கு வந்ததா பாகிஸ்தானின் கனவு?

INDvsPAK-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றிற்கு தகுதி பெற்ற அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து தற்போது தங்களுக்குள் மோதி வருகின்றன. அந்த வகையில் குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணியானது தாங்கள் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

IND vs SA VIrat Kohli Rohit Sharma

- Advertisement -

இவ்வேளையில் நேற்று பெர்த் நகரில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே குவித்தது.

பின்னர் 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 137 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி குரூப் இரண்டில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

INDvsPAK

அதே வேளையில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்திய அணி பெற்ற இந்த தோல்வி தற்போது பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவை பறித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் குரூப் இரண்டில் இடம் பெற்றுள்ள ஆறு அணிகளில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி அடுத்து வரவுள்ள ஜிம்பாப்வே மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் எளிதாக வெற்றி பெறும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இதையும் படிங்க : தோத்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கு டாட்டா காட்டிய அயர்லாந்து – முடிவுக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் கனவு

ஆனால் பாகிஸ்தான் அணி எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும் அது வீணான ஒன்று என்பதனால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம்.

Advertisement