தோத்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கு டாட்டா காட்டிய அயர்லாந்து – முடிவுக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் கனவு

IRE
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி தங்களது சொந்த மண்ணில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியானது கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலியா அணி இதுவரை ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு ஆட்டம் ரத்து என மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று இருந்த நிலையில் இன்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி ஆஸ்திரேலியா அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.

AUS vs IRE

- Advertisement -

இந்த போட்டியிலும் அடுத்து வரும் போட்டியிலும் பெரிய ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற வாய்ப்பிருந்த வேளையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி அயர்லாந்தை வீழ்த்தி இருந்தாலும் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவது சந்தேகம் ஆகியுள்ளது.

அந்த வகையில் இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 63 ரன்களை குவித்தார்.

AUS

அதனை தொடர்ந்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணியானது 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை குவித்து. இதன் காரணமாக 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. என்னதான் அயர்லாந்து அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது என்று கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து அணியை ரன் ரேட்டில் பின்னுக்குத் தள்ள ஆஸ்திரேலிய அணி அயர்லாந்து அணியை இன்றைய போட்டியில் 104 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்ற கட்டாயம் இருந்த வேளையில் அயர்லாந்து அணி 137 ரன்கள் வரை குவித்து விட்டதால் அடுத்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெரிய வெற்றியை பெற்றாலும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாது.

இதையும் படிங்க : வீடியோ : அசத்திய ஆஸ்திரேலியா – சூப்பர்மேனாக காற்றில் சாகசம் நிகழ்த்திய அயர்லாந்து வீரர், வியக்கும் ரசிகர்கள்

அதேபோன்று நாளை நடைபெற இருக்கும் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணியின் வாய்ப்பு முற்றிலுமாக பறிபோகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement