அசத்திய ஆஸ்திரேலியா – சூப்பர்மேனாக காற்றில் சாகசம் நிகழ்த்திய அயர்லாந்து வீரர், வியக்கும் ரசிகர்கள்

Barry McCarthy Catch
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் அக்டோபர் 31ஆம் தேதியன்று நடைபெற்ற 31வது லீக் போட்டியில் அயர்லாந்தை நிச்சயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா எதிர்கொண்டது. புகழ் பெற்ற பிரஸ்பேன் காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179/5 ரன்கள் சேர்த்தது. டேவிட் வார்னர் 3 (7) கிளன் மேக்ஸ்வெல் 13 (9) மிட்சேல் மார்ஷ் 28 (22) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 63 (44) ரன்களும் மார்கஸ் ஸ்டோனிஸ் 35 (25) ரன்களும் எடுத்தனர்.

அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பேரி மெக்கேர்த்தி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 180 என்ற பெரிய இலக்கை துரத்திய அயர்லாந்துக்கு பால் ஸ்டெர்லிங் 11 (7) கேப்டன் ஆண்டி பால்பரின் 6 (7) ஹேரி டெக்டர் 6 (4) குர்ட்டிஸ் கேம்பர் 0 (1) ஜார்ஜ் டாக்ரெல் 0 (4) என முக்கிய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 25/5 என திண்டாட்டமான தொடக்கத்தை பெற்ற அந்த அணியின் தோல்வி உறுதியானதுடன் 100 ரன்களை தாண்டுமா என்ற கவலை அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டது.

- Advertisement -

சூப்பர்மேன் மெக்கேர்த்தி:
ஆனால் 3வது இடத்தில் களமிறங்கி மறுபுறம் தில்லாக நின்ற லோர்கன் டுக்கர் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை ஆனது ஆகட்டும் பார்த்து விடுவோம் என்ற வகையில் ஆரம்பத்தில் நிதானத்தை காட்டினாலும் கடைசி நேரத்தில் சரவெடியாக பேட்டிங் செய்து அயர்லாந்து தூக்கி நிறுத்தினார். குறிப்பாக 9 பவுண்டரி 1 சிக்சருடன் 71* (48) ரன்கள் குவித்த அவரால் 100 ரன்களை கடந்த அந்த அணிக்கு எதிர்ப்புறம் வந்த வீரர்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினர். அதனால் 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து ஆல் அவுட்டானதால் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அதிரடியா வெற்றி பெற்றது. அதனால் 4 போட்டியில் 2வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

முன்னதாக இப்போட்டியில் 15வது ஓவரை எதிர்கொண்ட ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோனிஸ் 2வது பந்தில் அதிரடியான சிக்சர் பறக்க விட்டார். அது நேராக பவுண்டரி எல்லையை கடந்து சிக்ஸராக மாறினாலும் நான் இருக்கும் வரை அது நடக்காது என்ற வகையில் தாவிய அயர்லாந்து வீரர் பேரி மெக்கேர்த்தி காற்றில் பறந்து அபாரமான கேட்ச் பிடித்தார். ஆனால் அந்த அரை நொடி பொழுதில் தம்மால் பேலன்ஸ் செய்ய முடியாது என்று நினைத்த அவர் காற்றில் மிதந்தவாரே பந்தை மைதானத்திற்குள் தூக்கி போட்டு குறைந்தபட்சம் சிக்ஸரை தடுத்து நிறுத்தி தனது அணிக்கு 4 ரன்களை சேமித்தார்.

- Advertisement -

அதை பார்த்து வர்ணையாளர்களும் பின்புறத்தில் நின்ற மேத்தியூ வேட், ஆடம் ஜாம்பா உட்பட அனைத்து ஆஸ்திரேலியர்களும் கைதட்டி பாராட்டினார்கள். அதை ரிப்ளையில் பார்க்கும் போது கேட்ச்சை கச்சிதமாக பிடித்து பேலன்ஸ் செய்ய முடியாது என்பதை தெரிந்து காற்றில் பறந்தவாரே பந்தை அவர் உள்ளே தூக்கி போட்டதை தெளிவாகத் தெரிந்ததை பார்த்து ரசிகர்களும் ஷேன் வாட்சன் போன்ற வர்ணையாளர்களும் மீண்டும் வியந்து பாராட்டினர்.

அந்த அளவுக்கு சாகசம் செய்த அவர் தரையில் விழுந்ததால் ஏற்பட்ட வலியில் துடித்தாலும் முதலுதவி பெற்றுக் கொண்டு மீண்டும் தொடர்ந்து விளையாடினார். அப்படி பீல்டிங்கில் அசத்திய அவர் பந்து வீச்சிலும் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்த போதிலும் வெற்றியை பெற முடியாத அயர்லாந்து 4 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்து நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை குறைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement