- Advertisement -
உலக கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு – 2 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை

எதிர்வரும் டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே இடைவெளி உள்ளதால் அனைத்து நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் தங்களது அணிகளை அறிவிக்க வேண்டும் என ஐசிசி செப்டம்பர் 10-ஆம் தேதி வரை கெடு விதித்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இந்த டி20 தொடருக்கான அணியை அறிவித்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளது.

அதன்படி பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாமும், துணை கேப்டனாக ஷதாப் கானும் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 15 பேர் கொண்ட அணியில் 5 பேட்ஸ்மேன்களாக : ஆசிப் அலி, பாபர் அசாம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், மக்ஸ்சூட் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக அசாம் கான் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் நான்கு ஆல்ரவுண்டர்களாக முகமது நவாஸ், இமாத் வாசிம், முகமது வாசிம் ஜூனியர், ஷதாப் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி பந்து வீச்சாளர்களாக ஹசன் அலி, ஹாரிஸ் ராஃப், முகமது ஹாஸ்னென் மற்றும் ஷாகின் அப்ரிடி ஆகியோர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் அணி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி நிச்சயம் அங்கு அதிக சாதகத்தை பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அணியின் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமது மற்றும் சீனியர் வீரரான மாலிக் ஆகிய இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.

2006ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்க்கு அறிமுகமான மாலிக் 2020 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் 116 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர். அதேபோன்று சர்பிராஸ் அகமது தலைமையில் தான் ஏற்கனவே பாகிஸ்தான் அணி டி20 உலககோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by