பாகிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 23ஆம் தேதி துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானின் ராவில்பிண்டி நகரில் தொடங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அப்துல்லா சபிக் 2 ரன்களில் அவுட்டானார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் நிதானமாக விளையாடி 6 (11) ரன்கள் எடுத்தார். அப்போது சோரிஃபுல் இஸ்லாம் வீசிய 7வது ஓவரின் 5வது பந்தில் அவர் எட்ஜ் கொடுத்தது போல் தெரிந்தது. அதனால் வங்கதேசம் அணியினர் அவுட் கொடுக்குமாறு கேட்டனர். இருப்பினும் களத்தில் இருந்த நடுவர் அதை அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.
இதெல்லாம் அவுட்டா :
அதன் காரணமாக வங்கதேசம் ரிவியூ எடுத்தது. அதை சோதித்த போது பந்து ஷான் மசூத் பேட்டில் உரசியது போல் அல்ட்ரா எடுத்து தொழில்நுட்பத்தில் காண்பித்ததால் 3வது நடுவர் மைக்கேல் கௌ தீர்ப்பை மாற்றி அவுட் வழங்கினார். அது வங்கதேச வீரர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தினாலும் பாகிஸ்தான் கேப்டனுக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
குறிப்பாக பந்து தம்முடைய பேட்டில் படாமல் காலில் உரசியதாக கருதிய ஷான் மசூத் அது எப்படி அவுட்டாகும்? என்று களத்தில் இருந்த நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். இருப்பினும் எதுவும் மாறாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய அவர் பெவிலியன் சென்ற பின் தம்முடைய அவுட்டை ரிப்ளையில் பார்த்தார்.
ஏமாற்றப்பட்ட ரசிகர்கள்:
அதில் பந்து ஷான் மசூத் பேட்டை முழுமையாக கடந்த பின்பு தான் அல்ட்ரா ஈஸிஜ் தொழில்நுட்பத்தில் ஸ்பைக் ஏற்படுவது நன்றாக தெரிந்தது. அதனால் மேலும் கோபமடைந்த ஷான் மசூத் இது எப்படி அவுட்டாகும்? என்று அருகிலிருந்த தங்கள் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பியிடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அதே போல 3வது நடுவர் சரியாக பொறுமையாக கவனிக்காமல் தங்களுக்கு தவறான தீர்ப்பை கொடுத்து ஏமாற்றி விட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க: 9க்கு 9 வெற்றி.. கோபமானவர் கிடையாது.. ஆனா கௌதம் கம்பீர் இப்படித் தான்.. பியூஸ் சாவ்லா பேட்டி
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த முன்னாள் கேப்டன் பாபர் அசாம் டக் அவுட்டானார். அதனால் 16/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பாகிஸ்தானுக்கு துவக்க வீரர் சாய்ம் ஆயுப் மற்றும் சௌத் ஷாக்கீல் ஆகியோர் நிதானமாக விளையாடி வருகின்றனர். அதனால் சற்று முன் வரை பாகிஸ்தான் 100 ரன்கள் கடந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.



