1969க்கு பின்னே சென்ற பாகிஸ்தான்.. வரலாறு காணாத தோல்வி.. மோசமான உலக சாதனை சமன்

PAK vs BAN 2
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடியது. அந்தத் தொடரில் வழக்கம் போல வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியிலேயே 10 விக்கெட் வித்யாசத்தில் தோற்ற பாகிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது.

அதனால் விமர்சனங்களை சந்தித்த அந்த அணி 2வது போட்டியில் வென்று தொடரையாவது சமன் செய்யும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பினர். ஆனால் 2வது போட்டியிலும் எந்த முன்னேற்றத்தையும் காட்டாத பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

வரலாறு காணாத தோல்வி:

சொல்லப்போனால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரில் தோற்று பாகிஸ்தான் அவமானத்தை சந்தித்தது. இவை அனைத்தையும் விட தங்களுடைய சொந்த மண்ணில் கடைசியாக பாகிஸ்தான் விளையாடிய 10 போட்டிகளில் 6 தோல்வி 4 ட்ராவை பதிவு செய்துள்ளது 1 வெற்றியை கூட பெறவில்லை.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக தொடர்ந்து 10 டெஸ்ட் போட்டிகளில் 1 வெற்றியை கூட பதிவு செய்யாமல் பாகிஸ்தான் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு முன் கடைசியாக 1962 – 1969 காலகட்டங்களில் சொந்த மண்ணில் விளையாடிய 9 போட்டிகளில் பாகிஸ்தான் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை.

- Advertisement -

மோசமான உலக சாதனை:

ஆனால் தற்போது அதையும் தாண்டி பாகிஸ்தான் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அத்துடன் 10 டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தது ஒரு தோல்வியை சந்தித்த அணி என்ற வங்கதேசத்தின் மோசமான உலக சாதனையையும் பாகிஸ்தான் சமன் செய்துள்ளது. அதாவது தங்களது சொந்த மண்ணில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட டாப் 10 டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் குறைந்தது ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை இந்தியாவுக்கு ராசியான இடத்துக்கு மாற்றிய ஐசிசி.. ரோஹித் படை சாதிக்குமா?

இதற்கு முன் வங்கதேசம் மட்டுமே இப்படி ஒரு மோசமான உலக சாதனையை படைத்திருந்தது. மொத்தத்தில் சமீப காலங்களாகவே ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் ஐசிசி தொடர்களில் தோற்றது. தற்போது சொந்த மண்ணில் மற்றொரு கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் முதல் முறையாக தோற்றுள்ள பாகிஸ்தான் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது.

Advertisement