
கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக அதன் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு கிரிக்கெட் அணியும் சென்று விளையாட சம்மதிக்கவில்லை. அதனால் கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டில் எந்தவொரு கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியுடன் மற்ற அணிகள் பங்குபெறும் போட்டி துபாய் போன்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது தான் இந்த ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடன் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாட ஒப்புக்கொண்டு தற்போது ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடர் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆர்வமாக உள்ளது.
இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடரின் போது இலங்கை அணி வீரர்கள் ஹோட்டலுக்கு உள்ளே இருந்ததால் தாங்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும் பாகிஸ்தானில் எங்கும் சுதந்திரமாக செல்ல முடியவில்லை என்று கருத்துக் கூறி இருந்தார்கள். இதனை ஏற்காத பாகிஸ்தான் அரசு மீண்டும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் விளையாட நாங்கள் அழைக்கிறோம்.
உங்களுக்கு பாகிஸ்தானில் விளையாட விருப்பமில்லை எ ல் நாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் போட்டியை வைத்துக்கொள்வோம். ஆனால் அங்கு போட்டியை நடத்த அதிக செலவாகும் எனவே பாதி காசு தந்தால் நாங்கள் அங்கு போட்டி நடத்துகிறோம் என்று வைத்துள்ளது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுடன் விளையாடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.