2023 உ.கோ : இந்தியாவை விட எங்ககிட்ட தான் மாஸ் மிடில் ஆர்டர் பேட்டிங் இருக்கு, ஒருகை பாத்துடலாம் – முன்னாள் பாக் வீரர் பேட்டி

- Advertisement -

வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் ஐசிசி 2023 உலகக்கோப்பை நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டும் நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலைகுனியும் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

IND vs PAK World Cup

- Advertisement -

இருப்பினும் இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகிய 2 முதன்மை வீரர்கள் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பது இந்திய அணியில் பின்னடைவையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் அந்த 2 வீரர்கள் குணமடையாமல் இருப்பதால் உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெறும் ஆசிய கோப்பை அணியை அறிவிப்பதில் இந்தியா இன்னும் தாமதம் செய்து வருகிறது.

பலமான மிடில் ஆர்டர்:
அத்துடன் 2011 உலகக்கோப்பையில் நாக் அவுட் போன்ற போன்ற முக்கிய போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா ஆகிய இடதுகை வீரர்கள் முக்கிய பங்காற்றினர். ஆனால் தற்போதைய அணியில் ரோகித் முதல் பாண்டியா வரை டாப் 6 பேட்ஸ்மேன்கள் வலது கை பேட்ஸ்மேன்களாகவே இருப்பதால் எதிரணியை குழப்பம் அளவுக்கு இந்திய பேட்டிங் வரிசை கலவையாக இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் ரோகித், கில், விராட் ஆகியோரை தவிர்த்து இந்திய பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.

IND vs PAK Deepak Hooda INdia

மறுபுறம் பாபர், ரிஸ்வான், பக்கார் ஜமான் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் சல்மான் அலி, சடாப் கான், முகமது நவாஸ் ஆகியோரால் இந்தியாவை விட பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் மிகவும் வலுவானதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இம்முறை ஆசிய மற்றும் உலக கோப்பையில் இந்தியாவை நிச்சயமாக பாகிஸ்தான் வீழ்த்தும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எங்களிடம் பாபர், பக்கார், இமாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் டாப் ஆர்டரில் இருக்கின்றனர். அவர்களுடன் மிடில் ஆர்டரில் இப்திகார் அகமது, சல்மான் அலி மற்றும் சடாப் கான் ஆகியோருடன் முகமது நவாஸ் லோயர் ஆர்டரை பலப்படுத்துபவராக இருக்கின்றார். இந்த வகையில் மிடில் ஆர்டரை ஒப்பிடும் போது இந்தியாவை விட எங்களுடைய பேட்டிங் வரிசை வலுவானதாக இருக்கிறது. இந்திய அணியில் ஒருவேளை 5வது இடத்தில் இசான் கிசான் விளையாடினால் என்ன நடக்கும் என்பதும் அவர் எப்படி செயல்படுவார் என்பதும் நமக்கு தெரியாது”

Basit Ali

“மேலும் தற்போதைய இந்திய அணியில் 3வது இடத்தில் திலக் வர்மா விளையாடி 4வது இடத்தில் விராட் கோலி விளையாடுவார் என்ற பேச்சுகள் காணப்படுகின்றன. எனவே நம்பர் 4, 5, 6 ஆகிய இடங்களில் சரியான வீரர்களை குழப்பமின்றி களமிறக்குவதில் இந்தியா பிரச்சனையை சந்திக்கும். ஏற்கனவே அவர்களிடம் ரோகித், விராட் மற்றும் கில் ஆகிய 3 டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்கள் டாப் ஆர்டரில் இருக்கின்றனர். எனவே இந்தியாவின் வெற்றி அந்த 3 வீரர்களின் செயல்பாடுகளை பொறுத்து அமையும். ஒருவேளை அவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஆசிய மற்றும் உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது கடினமாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:பாண்டியாவின் திமிரை அடக்கும் முடிவா? பும்ராவை வைத்து பிசிசிஐ போட்டுள்ள புதிய பிளான் – விவரம் இதோ

முன்னதாக இந்தியனாக சொந்த மண்ணில் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்று சொன்னாலும் மிடில் ஆர்டரில் நிலவும் பிரச்சனைகளை சரி செய்ய விட்டால் வெற்றி பெறுவது கடினம் என்று யுவராஜ் சிங் தெரிவித்திருந்தார். எனவே இந்த மிடில் ஆர்டர் குழப்பங்களை விரைவில் துவங்கும் ஆசியக் கோப்பையில் இந்தியா தீர்க்க முயற்சிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement