பாண்டியாவின் திமிரை அடக்கும் முடிவா? பும்ராவை வைத்து பிசிசிஐ போட்டுள்ள புதிய பிளான் – விவரம் இதோ

Bumrah Pandya
- Advertisement -

குஜராத்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தற்சமயத்தில் இந்திய வெள்ளைப்பந்து அணியின் அடுத்த கேப்டனாக கருதப்படுகிறார். கடந்த 2016 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டதால் தோனி தலைமையிலான இந்திய அறிமுகமாகி ஆல் ரவுண்டராக அசத்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று விமர்சித்த ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் கருத்தை 2018 நாட்டிங்கம் டெஸ்டில் 5 விக்கெட் ஹால் எடுத்து பொய்யாக்கினார். அதனால் கபில் தேவுக்கு பின் நீண்ட கால தேடலின் பரிசாக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

Hardik Pandya Chahal

- Advertisement -

ஆனால் 2018 ஆசியக் கோப்பையில் சந்தித்த காயத்திற்கு பின் தடுமாறிய அவர் 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் போராடி 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் முதல் வருடத்திலேயே அனுபவமில்லாத போதிலும் மிகச்சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து கோப்பையை வென்ற அவர் மீண்டும் கம்பேக் கொடுத்து இந்தியாவின் வெற்றிகளில் ஆல் ரவுண்டராக பங்காற்றி வருகிறார்.

புதிய பிளான்:
அதன் காரணமாக ரோகித் சர்மாவுக்கு பின் 2024 டி20 உலகக் கோப்பை போன்ற வருங்கால தொடர்களில் இந்தியாவின் கேப்டனாக பாண்டியாவை நியமிக்க தேர்வுக்குழு மற்றும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்கேற்றார் போல் 2022 டி20 உலகக்கோப்பைக்கு பின் இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 தொடர்களிலும் பாண்டியா தான் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தினார்.

Pandya-and-Kohli-Rohit

இருப்பினும் தற்போது நடைபெறும் அயர்லாந்து டி20 தொடரில் 2023 உலகக்கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்காக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் துணை கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ராவை அறிவிப்பதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக பாண்டியாவை விட பந்து வீச்சு துறையில் விராட் கோலி போல இன்றியமையாத வீரராக திகழும் பும்ரா ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் துணை கேப்டனாகவும் 2022 ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். எனவே உலகக்கோப்பையில் துணை கேப்டனாக நியமிப்பதற்கு முன்னோட்டமாகவே அயர்லாந்து தொடரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ருத்ராஜுக்கு பதிலாக அவர் கேப்டனாக செயல்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

Jasprit Bumrah

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியை தலைமை தாங்கும் பொறுப்பில் யார் சீனியர் என்று நீங்கள் பார்க்கும் போது 2022இல் டெஸ்ட் அணியை கேப்டனாக வழி நடத்திய பும்ரா பாண்டியாவை விட முன்னிலையில் இருக்கிறார். மேலும் அவர் கடந்த 2022 ஜனவரியில் தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாண்டியாவுக்கு முன்பாகவே துணை கேப்டனாக செயல்பட்டுள்ளார்”

- Advertisement -

“அதன் காரணமாக ஆசிய மற்றும் உலக கோப்பையில் ரோகித் சர்மாவுக்கு உதவும் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டால் அதை கண்டு ஆச்சரியப்படாதீர்கள். சொல்லப்போனால் அதன் காரணமாகவே அயர்லாந்து தொடரில் ருதுராஜுக்கு பதிலாக அவரிடம் கேப்டன்ஷிப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். அந்த வகையில் வருங்கால இந்திய கேப்டனாக பார்க்கப்படும் பாண்டியாவுக்கு பதிலாக திடீரென உலககோப்பை போன்ற முக்கிய தொடரில் பும்ராவை துணை கேப்டனாக பிசிசிஐ அறிவிக்க நினைப்பது வியப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.

Hardik Pandya Tilak Varma

இதையும் படிங்க:உலகக்கோப்பை தொடரில் அந்த 2 பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவிப்பார்கள் – கிரேக் சேப்பல் கருத்து

முன்னதாக வரலாற்றுத் தோல்வியை சந்தித்த 2023 வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சஹால், அக்சர் பட்டேல் ஆகியோரை சரியாக பயன்படுத்தாமல் திலக் வர்மாவை சதமடிக்க விடாமல் பாண்டியா சுயநலமாக நடந்து கொண்டதாக நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். குறிப்பாக பாண்டியா திமிராக நடந்து கொள்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். ஒருவேளை தாம் தான் அடுத்த கேப்டன் என்ற எண்ணத்துடன் அவர் இவ்வாறு செயல்படுவதால் அதை அடக்குவதற்காக பிசிசிஐ இந்த முடிவெடுத்துள்ளதா? என தற்போது ரசிகர்கள் மனதில் கேள்வி எழுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement