பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வைக்கின்றன.
வரலாற்று சாதனையை நிகழ்த்திய பாகிஸ்தான் :
அதனை தொடர்ந்து இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி ராவல்பின்டி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியானது தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் அணி 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் பந்து வீசிய பாகிஸ்தான் அணி 142 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு அணியும் செய்யாத ஒரு நிகழ்வை செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதன்படி இந்த போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்ய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக அமீர் ஜமால் மட்டும்தான் இருந்தார்.
ஆனால் அவர் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. பாகிஸ்தான் அணி சார்பாக சஜித் கான் மற்றும் நோமன் அலி ஆகிய இருவரும் சேர்ந்து 48 ஓவர்கள் வீசினர். அவர்களை தவிர்த்து மற்ற இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக ஜாஹித் முகமது மற்றும் ஆஹா சல்மான் ஆகியோர் 11 ஓவர்கள் வீசினார். இப்படி முதல் இன்னிங்சில் எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரையுயும் பயன்படுத்தாமல் மொத்தமாக சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து ஒரு இன்னிங்ஸை முடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் நிகழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க : 156க்கு சுருட்டிய சான்ட்னர்.. 2001க்குப்பின் இந்தியா மோசமான சாதனை.. 46 அவுட்டை விட மோசம் என ஸ்மித் விளாசல்
இதற்கு முன்னதாக கடந்த 1882-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை மட்டும் வைத்து முதல் இன்னிங்சில் 115 ஓவர்களை வீசியிருந்தது சாதனையாக இருந்த வேளையில் அந்த சாதனையை தற்போது பாகிஸ்தான் அணி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



