இந்தியாவுக்கு பயமில்லை.. பாகிஸ்தானுக்கு இதுவே பெருசு.. டாப் 7லிருந்து தூக்கனும்.. ஸ்ரீகாந்த் பேட்டி

Srikkanth
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய 3 லீக் போட்டிகளிலும் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. குறிப்பாக அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்த இந்தியா பரம எதிரி பாகிஸ்தானையும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே போல நேற்று ஓமன் அணியையும் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அந்தப் போட்டியில் ஓமன் அணி இந்தியாவுக்கு பெரிய சவாலைக் கொடுத்தது என்றே சொல்லலாம். குறிப்பாக 189 ரன்களை துரத்திய ஓமன் அணி 17.2 ஓவரில் 149/1 என்ற வலுவான நிலையில் இருந்தது. அதே போல பந்து வீச்சில் 8 விக்கெட்டுகளை எடுத்த அந்த அணி இந்தியாவுக்கு நல்ல போட்டியைக் கொடுத்ததாக கேப்டன் சூரியகுமார் யாதவ் பாராட்டினார்.

- Advertisement -

பாகிஸ்தானை நீக்குங்க:

இந்நிலையில் ஓமன் அணி அளவுக்கு கூட பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்கு சவாலைக் கொடுக்கவில்லை என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். தம்மைப் பொறுத்த வரை ஆசியக் கோப்பை போன்ற பெரியத் தொடரில் தற்போதைய பாகிஸ்தான் அணி விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு.

“ஆசியக் கோப்பை போன்ற கௌரவமான தொடரில் பாகிஸ்தான் விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டதே பெரியது. நாளை மைக் ஹெசன் (பயிற்சியாளர்) மீண்டும் நாங்கள் எவ்வளவு சிறந்த அணி, இந்தியாவுக்கு எதிராக துரதிஷ்டவசத்தாலேயே தோற்றோம் என்ற கருத்துக்களுடன் வருவார். உண்மையில் மைக் ஹெசனை பயிற்சியாளராக வைத்துக் கொண்டு நீங்கள் எங்கேயும் செல்ல முடியாது”

- Advertisement -

இந்தியாவுக்கு பயமில்லை:

“முன்னோக்கி செல்கையில் பாகிஸ்தான் முதன்மை அணிகளுக்கு எதிராக விளையாடக் கூடாது. இங்கே வந்துள்ள சில (ஓமன், ஹாங்காங்) உறுப்பு நாட்டு அணிகளுடன் விளையாட வேண்டும். பாகிஸ்தான் அணி டாப் 7 இடங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும். இனிமேல் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரசிகர்களை அதிகம் ஈர்க்காது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி வரலாறு மாறிவிட்டது”

இதையும் படிங்க: அவங்கள மாதிரியே இந்தியாவை ஒய்ட்வாஷ் செய்வோம்.. அதுக்கு இந்த 4 பவுலர்களே போதும்.. வெ.இ கோச் சமி

“ஏனெனில் தற்போதைய பாகிஸ்தான் அணி எங்களுக்கு எந்த பயத்தையும் கொடுப்பதில்லை. அவர்கள் சென்னையில் நடைபெறும் 7வது டிவிசன் லீக் தொடரில் விளையாடும் அணியை போல் இங்கே விளையாடுகின்றனர்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement