என்ன ப்ரோ என்ன ஆச்சு? முகமது ஷமியை மனசாட்சியின்றி கலாய்க்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் – காரணம் இதோ

Mohammeed shami Shaheen Afridi
- Advertisement -

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்தியா அடுத்ததாக வங்கதேசத்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி களமிறங்குகிறது. இருப்பினும் இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம் பிடித்திருந்த சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான முகமது ஷமி தனது சிறப்பான பந்து வீச்சால் 3 வகையான இந்திய அணிலும் விளையாடி வருகிறார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் நாளடைவில் தடுமாறிய அவர் கடைசியாக கடந்த 2021 டி20 உலக உலகக்கோப்பையில் விளையாடியிருந்த நிலையில் அடுத்த தலைமுறை இளம் வீரர்களை உருவாக்குவதற்காக தேர்வுக்குழு மொத்தமாக கழற்றி விட்டது. ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் முதல் சீசனிலேயே குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருந்த காரணத்தால் கடைசி நேரத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் வெளியேறியதால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட அவர் சுமாரான செயல்பாடுகளையே வெளிப்படுத்தினார்.

- Advertisement -

கலாய்க்கும் பாக் ரசிகர்கள்:
அதனால் இனிவரும் காலங்களில் ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்டாலும் இவரை இந்திய டி20 அணியில் பார்க்க முடியாது என்று உறுதியாக நம்பப்படுகிறது. ஆனாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போதும் இவர் தான் முதன்மை பவுலராக இருப்பதால் இத்தொடரிலிருந்து அவர் காயத்தால் வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. முன்னதாக டி20 உலக கோப்பையில் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக சுமாராக பந்து வீசிய முகமது ஷமி இந்திய அணிக்கு பொருத்தமற்றவர் என்று விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் அவர் தான் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறினார்.

அதை கவனித்து வைத்திருந்த முகமது ஷமி அதே இங்கிலாந்துக்கு எதிரான ஃபைனலில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்த போது மனமுடைந்த ட்வீட் போட்ட சோயப் அஃதருக்கு “சாரி பிரதர். இது தான் கர்மா” என்று கொடுத்த பதிலடி உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில் தற்போது காயமடைந்த முகமது ஷமி அதற்கான சிகிச்சைகளை எடுக்கும் படத்தை தனது ட்விட்டரில் “பொதுவாக காயம் ஒவ்வொரு கணமும் பாராட்ட கற்றுக் கொடுக்கிறது. எனது வாழ்க்கை முழுவதும் எனக்கு காயங்கள் இருந்தன. இது தாழ்மையானது. இது உங்களுக்கு முன்னோக்கி செல்ல உதவி அளிக்கிறது. எத்தனை முறை காயப்படுத்தப் பட்டாலும் அதிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இதிலிருந்து மீண்டு வந்து வலுவாக திரும்புவேன்” என்ற வாசகங்களுடன் பதிவிட்டார்.

- Advertisement -

அதை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் கர்மா ட்வீட்டை மனதில் வைத்துக் கொண்டு “சாரி பிரதர். இது தான் கர்மா” என்று பதிலடி கொடுத்து கலாய்த்து வருகிறார்கள். அதுவும் ஒரு கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்வி என்பது சாதாரணம் என்ற நிலைமையில் மனிதனாக காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அவரை மனசாட்சியின்றி பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டலடித்துள்ளது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அதனால் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தார் ரோட் பிட்ச்சில் அடி வாங்குவதும் கர்மா தான் என்று இந்திய ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதே சமயம் இதையும் நிச்சயமாக கவனிக்கும் முகமது ஷமி அதை மனதில் வைத்து காயத்திலிருந்து குணமடைந்து அடுத்த வருடம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா களமிறங்கும் போது சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பார் என்று நம்பலாம்.

Advertisement