- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. இந்தியாவின் 48 வருட மோசமான உலக சாதனையை பகிர்ந்த கொண்ட பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆகஸ்ட் 25ஆம் தேதி நிறைவு பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து வங்கதேசம் சாதனை படைத்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாகவும் வங்கதேசம் சாதனை படைத்தது.

மறுபுறம் 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவிடம் தோற்ற பாகிஸ்தான் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது. அப்படியே கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோற்றது. அதைத் தொடர்ந்து தற்போது சொந்த மண்ணில் மற்றொரு கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் அவமானத் தோல்வியை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

- Advertisement -

இந்தியாவின் சாதனை:

குறிப்பாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 448-6 ரன்களிலேயே வங்கதேசத்தை குறைத்து மதிப்பிட்டு தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஆனால் இரண்டாவதாக பேட்டிங் செய்த வங்கதேசம் அபாரமாக விளையாடி 565 ரன்கள் குவித்தது. அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானை வெறும் 146 ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம் வரலாற்று வெற்றியை பெற்றது.

அதனால் வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பாகிஸ்தான் பரிதாப சாதனை படைத்தது. அதை விட வங்கதேசத்துக்கு எதிராக ஒரு போட்டியில் டிக்ளேர் செய்த பின்பும் கடைசியில் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது. இது போக ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டிக்ளர் செய்த பின்பும் கடைசியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற அணி என்ற இந்தியாவின் மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் சமன் செய்துள்ளது.

- Advertisement -

தேங்க்ஸ் பாகிஸ்தான்:

ஆம் கடந்த 1976ஆம் ஆண்டு கிங்ஸ்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 306/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. குறிப்பாக மண்டையை பதம் பார்க்கக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து இந்திய டெயில் எண்டர்களை காப்பாற்றுவதற்காக கேப்டன் பிசன் சிங் பேடி வேண்டுமென்றே டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இதையும் படிங்க: அன்னைக்கு இந்தியாவிடம் வாங்கிய அடியிலிருந்து.. இன்னும் பாகிஸ்தான் எழுந்திருக்கல.. ரமீஸ் ராஜா வேதனை

இறுதியில் எதிர்பார்த்ததை போலவே அப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அப்படி 48 வருடத்துக்கு முன் இந்தியா படைத்த மோசமான சாதனையை தற்போது அண்டை நாடான பாகிஸ்தான் பகிர்ந்து கொண்டுள்ளது. அதனால் சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் ரொம்ப தேங்க்ஸ் தம்பி என்று பாகிஸ்தானை பாராட்டுகிறார்கள். மொத்தத்தில் இந்தியா, பாகிஸ்தானை தவிர்த்து வேறு எந்த அணியும் முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்த பின்பும் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதில்லை.

- Advertisement -