PAK vs NZ : நியூஸிலாந்தை போராடி வென்ற பாகிஸ்தான் – ஆஸி, இந்தியாவின் உலக சாதனையை சமன் செய்து அசத்தல்

PAk vs NZ ODI
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய டாம் லாதம் தலைமையிலான இளம் நியூசிலாந்து அணி மழைக்கு மத்தியில் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. மறுபுறம் சொந்த மண்ணில் கடந்த வருடம் ஒரு தொடரில் கூட வெல்ல முடியாத பாகிஸ்தான் இத்தொடரிலும் முழுமையாக கோப்பையை வெல்ல முடியாததால் விமர்சனங்களை சந்தித்தது. அந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது.

ஏப்ரல் 27ஆம் தேதியான நேற்று ராவல்பிண்டி மைதானத்தில் தொடங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 288/7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் பௌஸ் 18 (26) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் மற்றொரு தொடக்க வீரர் வில் எங் 8 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 86 (78) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மைல்கல் வெற்றி:
அவருடன் தனது பங்கிற்கு சிறப்பாக செயல்பட்ட டார்ல் மிட்சேல் அதிகபட்சமாக 11 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 113 (115) ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி, நாசிம் ஷா, ஹரீஸ் ரவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதை தொடர்ந்து 289 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே பகார் ஜமானுடன் நங்கூரத்தை போட்டு நியூசிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறந்த தொடக்கம் கொடுத்த இமாம்-உல்-ஹக் 60 (65) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் பாப ர் அசாம் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 49 (46) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக களமிறங்கிய ஷான் மசூத் 1 (12) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட பகார் ஜமான் 13 பவுண்டரை 1 சிக்சருடன் பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக தன்னுடைய சதமடித்து 117 (114) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் முகமது ரிஸ்வான் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 42* (34) ரன்கள் எடுத்ததால் 48.3 ஓவரிலேயே 291/5 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் தேவையான ரன்களை எடுத்தும் பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் போராடி தோல்வியை சந்தித்த நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆடம் மில்னே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய பகார் ஜமாம் ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக கடந்த 1973 முதல் ஒருநாள் போட்டிகளில் களமிறங்குவந்தாற்கன அந்தஸ்தை பெற்று விளையாடி வரும் பாகிஸ்தான் 1992ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையில் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வகையில் கடத்த 50 வருடங்களாக இதுவரை 949 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் இப்போட்டியில் 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க:RR vs CSK : சென்னை அணிக்கு எதிராக நான் சிறப்பாக பந்துவீச இதுதான் காரணம் – ஆடம் ஜாம்பா பேட்டி

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் 500 வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் உலக சாதனையை சமன் செய்துள்ள பாகிஸ்தான் அதிக வெற்றிகளை பதிவு செய்த 3வது அணியாகவும் தொடர்ந்து ஜொலித்து வருகிறது. அந்த பட்டியல்:
1. ஆஸ்திரேலியா : 594 வெற்றிகள் (978 போட்டிகள் – 341 தோல்விகள்)
2. இந்தியா : 539 (1029 போட்டிகள் – 438 தோல்விகள்)
3. பாக்கிஸ்தான் : 500* வெற்றிகள் (949 போட்டிகள் – 420 தோல்விகள்)
4. வெஸ்ட் இண்டீஸ் : 411 வெற்றிகள் (854 போட்டிகள் – 403 தோல்விகள்)
5. தென் ஆப்பிரிக்கா : 399 வெற்றிகள் (654 போட்டிகள் – 228 தோல்விகள்)

Advertisement