RR vs CSK : சென்னை அணிக்கு எதிராக நான் சிறப்பாக பந்துவீச இதுதான் காரணம் – ஆடம் ஜாம்பா பேட்டி

Zampa
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பலம் வாய்ந்த சென்னை அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

Jaiswal

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பட்லர் (77) மற்றும் ஜெய்ஸ்வால் (27) ஆகியோரது அதிரடி காரணமாக துவக்கம் முதலே வேகமாக ரன்களை சேர்த்தது. பின்னர் சஞ்சு சாம்சன் (17), ஹெட்மயர் (8), ஜூரல் (34), படிக்கல் (27) என அனைவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது.

பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே குவித்ததால் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சார்பாக பந்து வீசிய ஆடம் ஜாம்பா மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினார். குறிப்பாக நேற்றைய போட்டியில் மூன்று ஓவர்களை வீசிய அவர் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Adam Zampa

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய ஆடம் ஜாம்பா கூறுகையில் : கடந்த இரண்டு நாட்களாகவே நாங்கள் மிகச் சரியான மனநிலையில் இருந்தோம். நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாகவும் இருந்தது. அந்த வகையில் இன்றைய போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்ததால் எங்களுக்கு கூடுதல் சாதகம் கிடைத்தது. இந்த மைதானத்தில் சேசிங் சற்று சவாலாக இருக்கும் என்று கணித்திருந்தோம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் துவக்க வீரர்கள் இருவரையும் நான் ஆட்டமிழக்க வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக சிஎஸ்கே வீரரான தீக்ஷனா பந்து வீசும் போதே மைதானத்தின் தன்மையைப் பற்றி புரிந்து கொண்டேன். அதன் காரணமாகவே இன்று சற்று கூடுதல் வேகத்துடன் பந்தினை கொஞ்சம் ஷாட்டாக வீசினேன். அந்த வகையில் பந்தும் ஸ்கிட் ஆகி சென்றது மட்டுமின்றி என்னுடைய வேலையையும் எளிதாக்கியது.

இதையும் படிங்க : CSK vs RR : சென்னை அணிக்கெதிரான எனது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணமே இதுதான் – யாஷஸ்வி ஜெய்ஷ்வால் பேட்டி

இந்த போட்டியில் இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக ஜெய்ஷ்வால் மற்றும் ஜுரல் ஆகியோரது பேட்டிங் அசத்தலாக இருந்தது. இந்த தொடர் முழுவதுமே அவர்கள் இதேபோன்று சிறப்பாக விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். நான் நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். எனவே மனரீதியாக எப்படி நம்மை மகிழ்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் எனக்கு தெரியும் என்று ஜாம்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement