CSK vs RR : சென்னை அணிக்கெதிரான எனது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணமே இதுதான் – யாஷஸ்வி ஜெய்ஷ்வால் பேட்டி

Yashasvi-Jaiswal
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-ஆவது லீக் ஆட்டம் நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது. இப்படி ராஜஸ்தான அணியின் மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் திழ்ந்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் 43 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்து அதிரடி காட்டியதால் பின்னால் வந்த வீரர்களும் ரன்களை வேக வேகமாக சேர்க்க அந்த அணி 202 ரன்களை குவித்தது. பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே குவித்ததால் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பேட்டிங்கில் 77 ரன்களை குவித்த ஜெய்ஸ்வாலுக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறுகையில் : இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. நான் இந்த போட்டியில் பந்தை அடித்து விளையாட மட்டுமே நினைத்தேன்.

Jaiswal

அதேபோன்று காற்று எந்த பக்கம் வீசுகிறதோ அந்த பக்கம் அடித்தால் நிறைய ரன்கள் கிடைக்கும் என்றும் விழிப்புணர்வோடு இருந்தேன். அதோடு இந்த போட்டியில் நான் சரியான கிரிக்கெட் ஷாட்களை மட்டுமே விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியதில் மகிழ்ச்சி.

- Advertisement -

எப்பொழுதுமே என்னுடைய பேட்டிங்கின் முன்னேற்றத்திற்காக நான் அணி நிர்வாகத்துடனும், சீனியர் வீரர்களான தோனி, விராட் கோலி ஆகியோருடன் நிறைய பேசிக்கொண்டே இருப்பேன். அந்த வகையில் அவர்கள் பிரஷரான சூழ்நிலையிலும் எப்படி அதனை கையாண்டு விளையாடுவது என்பது குறித்து நிறைய அறிவுரைகளை வழங்கி இருக்கின்றனர். அவை எல்லாம் மனதில் வைத்து தான் நான் இன்றைய போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடினேன்.

இதையும் படிங்க : RR vs CSK : சி.எஸ்.கே அணியை வீழ்த்த போட்ட சிம்பிள் பிளான் இதுதான். வெற்றிக்கு பிறகு – சஞ்சு சாம்சன் பேட்டி

அதோடு என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருந்தால் தான் அணியின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதனால் இந்த மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்று அதிரடியாக விளையாடினேன் என ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement