பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 11கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு நேற்று வழங்கியது – காரணம் இதுதானா ? சூப்பர்

Eshan-PCB
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ – க்கு பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று 1.6 மில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாயை காசோலையாக வழங்கியுள்ளது. இதனை பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்து உள்ளது. அதன் காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

Pakistan

- Advertisement -

அதன்படி பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணைப்படி நடப்பதை பி.சி.சி.ஐ மறுத்தது. மேலும் பாகிஸ்தான் அணியுடனான எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி சில ஆண்டுகளாக விளையாடுவதை தொடர்ந்து தவிர்த்து வந்தது.

இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் போட்டி நடைபெறாமல் போனதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதனால் பி.சி.சி.ஐ- யிடம் இருந்து சுமார் 481 கோடி ரூபாய் இழப்பீடாக கேட்டது. இதனை விசாரித்த ஐ.சி.சி பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் சூழல் காரணமாக போட்டி நடைபெறாமல் போனதை அறிந்து பாகிஸ்தானின் மனுவை தள்ளுபடி செய்தது.

Pakistan 1

மேலும், இந்த வழக்கிற்கான செலவு மற்றும் இதர உபரி கட்டணம் என பி.சி.சி.ஐ – க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் 11 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால், நேற்று அந்த முடிவினை மதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூபாய் 11 கோடியை வழங்கியது.

Advertisement