ஆசியக்கோப்பை : ஷாஹீன் அப்ரிடியை தொடர்ந்து மற்றொரு வீரருக்கு ஏற்பட்ட காயம் – பாகிஸ்தான் பின்னைடைவு

Shaheen-Afridi
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை தொடரானது துவங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஹாங்காங் என ஆறு நாடுகள் கலந்து கொள்ளும் இந்த தொடரானது ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை துபாய் மற்றும் சார்ஜா ஆகிய மைதானங்களில் நடைபெற இருக்கிறது.

Asia-Cup

- Advertisement -

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் இந்த தொடரில் இருந்து வெளியேறியது நாம் அறிந்ததே.

அந்த வகையில் ஏற்கனவே பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி இந்த ஆசிய கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக வெளியேறியது அந்த அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு வீரர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Mohammad Wasim

அந்த வகையில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த 21 வயதான வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிம் பயிற்சியின் போது முதுகு வலி ஏற்பட்டதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார். பின்னர் ஸ்கேன் எடுத்து பார்க்கையில் அவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த காயம் சில வாரங்கள் ஆகும் என்பதனால் அவர் இந்த ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பது சிக்கல் ஆகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே பாகிஸ்தான் அணியை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் தற்போது இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஜாம்பவான் சச்சினின் 2 ஆல்-டைம் ஆசிய கோப்பை சாதனைகளை தகர்க்க போகும் ரோஹித் சர்மா – முழுவிவரம் இதோ

ஆனால் இவர்கள் இருவரும் தற்போது துபாயில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள் என்றும் அதனை தொடர்ந்து அவர்கள் டி20 உலக கோப்பைக்கு தயார்படுத்தப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement