பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டி ஜூலை 20ஆம் தேதி தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தடுமாற்றமாக பேட்டிங் செய்து வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக பாகிஸ்தான் ஆல் அவுட்டாகி அவமான சாதனையை படைத்தது. அடுத்து விளையாடிய வங்கதேசம் சிறப்பாக பேட்டிங் செய்து 16 ஓவருக்குள் இலக்கைத் தொட்டு வென்றது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று வங்கதேசம் அசத்தியுள்ளது.
வங்கதேசத்தின் சூழ்ச்சி:
இந்நிலையில் அப்போட்டியில் தங்களை தோற்கடிப்பதற்காக வங்கதேசம் மோசமான பிட்ச்சை தயாரித்திருந்ததாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். ஏனெனில் தாக்காவில் இருந்த பிட்ச் சர்வதேச கிரிக்கெட்டுக்கு உகந்தது கிடையாது என்று அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.
“இந்த பிட்ச் யாருக்கும் உகந்தது கிடையாது என்று நினைக்கிறேன். இரு அணிகளுமே ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் இத்தொடரில் விளையாடுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இது போன்ற பிட்ச் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதே சமயம் நாங்கள் பேட்டிங் செய்த விதத்திற்கு எந்த சாக்கும் சொல்ல முடியாது”
சாக்கு சொன்ன பாகிஸ்தான்:
“ஆனால் இந்த பிட்ச் சர்வதேச தரத்தில் இல்லை” என்று கூறினார். அவருக்கு பிட்ச் மேலே எந்த குறையும் சொல்ல முடியாது என்று வங்கதேச ஓப்பனிங் பேட்ஸ்மேன் பர்வேஸ் ஹொசைன் பதிலடி கொடுத்துள்ளார். ஏனெனில் 16 ஓவரிலேயே இலக்கைத் தொட்ட வங்கதேசம் 20 ஓவரில் 160 ரன்கள் அடித்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 200 டைம் கேட்டும்.. என் அப்பாவை அடிச்ச உங்ககிட்ட பேசமாட்டேன்னு ஸ்ரீசாந்த் மகள் சொன்னது வேதனை.. ஹர்பஜன்
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் 16 ஓவருக்குள் சேசிங் செய்து முடித்ததால் பிட்ச் மோசமாக இருந்ததாக கருதவில்லை. சொல்லப்போனால் நாங்கள் முழுமையாக 20 ஓவர்கள் விளையாடிருந்தால் 150 – 160 ரன்கள் எடுத்திருப்போம். ஒருவேளை பாகிஸ்தான் பிட்ச்சுக்கு தகுந்தார் போல் தங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். பொதுவாக தாக்கா பிட்ச் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். அதைச் சரியாகப் படித்து நாங்கள் எங்களுடைய திட்டங்களை செயல்படுத்தினோம்” என்று கூறினார்.



