200 டைம் கேட்டும்.. என் அப்பாவை அடிச்ச உங்ககிட்ட பேசமாட்டேன்னு ஸ்ரீசாந்த் மகள் சொன்னது வேதனை.. ஹர்பஜன்

harbhajan Singh 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மிகச்சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்த அவர் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பையை வெல்ல உதவினார். ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடிய அவர் சாம்பியன் பட்டங்களையும் வென்றார்.

அப்படி வெற்றிகரமான கேரியரை கொண்ட ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் சக வீரரான ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தது பெரிய சர்ச்சையானது. 2008 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் மும்பைக்கு எதிரான போட்டியின் முடிவில் ஹர்பஜன் தம்மை அறைந்ததாக அழுது கொண்டே சொன்னார். அதனால் எஞ்சிய போட்டிகளில் ஹர்பஜன் விளையாடுவதற்கு பிசிசிஐ தடை விதித்தது.

- Advertisement -

பேசாத ஸ்ரீசாந்த் மகள்:

நாளடைவில் அதற்காக ஸ்ரீசாந்திடம் நேரடியாக ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார். இந்நிலையில்” என்னுடைய அப்பாவை அடித்த உங்களிடம் பேசப் போவதில்லை” என்று ஸ்ரீசாந்த் மகள் சமீபத்தில் சந்தித்த போது சொன்னது வேதனையளிப்பதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ரீசாந்துடன் ஏற்பட்ட மோதல் என் வாழ்வில் நாம் மாற்ற விரும்பும் விஷயமாகும்”

“அந்த நிகழ்வை என்னுடைய கேரியரிலிருந்து நீக்க விரும்புகிறேன். அதை நான் செய்திருக்கக்கூடாது. அதற்காக 200 முறை மன்னிப்பு கேட்டு விட்டேன். இத்தனை வருடங்கள் கடந்த பின்பும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது. அது இன்னும் என்னை வருத்தமடைய வைக்கிறது. அது என்னுடைய தவறு. அனைவரும் தவறு செய்தாலும் அதை மீண்டும் செய்ய மாட்டோம் என்று நம்புகிறோம்”

- Advertisement -

ஹர்பஜன் வேதனை:

“என்னுடைய சக வீரரான ஸ்ரீசாந்த்துக்கு எதிராக நான் அப்படி நடந்திருக்கக்கூடாது. அது என்னுடைய தவறு. என்னை தூண்டி விட்டதே அவருடைய ஒரே தவறு. ஆனால் அது பரவாயில்லை. நான் செய்தது சரியில்லை. அதற்காக மன்னிப்பு சொல்லி விட்டேன். ஸ்ரீசாந்த் மகளை சமீபத்தில் பார்த்த போது “என்னுடைய அப்பாவை அடித்ததால் உங்களிடம் பேச விரும்பவில்லை” என்று சொன்னார். இத்தனை வருடங்கள் கடந்தும் அவர் அப்படி சொல்வது எனக்கு அதிக வேதனையைக் கொடுக்கிறது”

இதையும் படிங்க: முடியலன்னா முன்னாடியே சொல்லிடுங்க.. அதை விட்டுட்டு இந்தியாவின் பெயரை சங்கடப்படுத்தாதீங்க.. அப்ரிடி சாடல்

“அதைக் கேட்ட என்னுடைய இதயம் உடைந்து கண்கள் கலங்கின. அந்தக் குழந்தை என்னை அவளுடைய தந்தையை அடித்தவனாக பார்க்கிறது. அதற்காக வருந்துகிறேன். இன்னும் அவளிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை. நான் அப்படிப்பட்ட நபர் கிடையாது என்று நினைக்க என்ன செய்ய வேண்டும்? என்று ஸ்ரீசாந்த் மகளிடம் தொடர்ந்து கேட்டு வருகிறேன். அவள் வளர்ந்த பின் என்னை அதே பார்வையில் பார்க்கக்கூடாது என்று விரும்புகிறேன். அந்தக் குழந்தைக்கு ஆதரவளிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement