- Advertisement -
உலக கிரிக்கெட்

9 முறை டக்.. ஜிம்பாப்வே அணியிடம் அப்ரிடியை முந்தி பாபர் அசாம் மோசமான சாதனை.. பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்திரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நவம்பர் 18ஆம் தேதி துவங்கியது. ராவல்பிண்டியில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவரில் போராடி 147/8 ரன்கள் குவித்தது.

ஜிம்பாப்வே அணிக்கு பிரைன் பென்னெட் 49 (36), மருமணி 30 (22) ரன்கள் அடித்து 72 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் சிக்கந்தர் ராசா மட்டுமே அதிரடியாக 34* (24) ரன்கள் எடுத்தார். ஏனைய பேட்ஸ்மேன்கள் 20 ரன்கள் கூட அடிக்காமல் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

பாகிஸ்தான் வெற்றி:

பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக முகமது நவாஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு திணறலாக பேட்டிங் செய்த பர்ஹான் 16 (15) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் 3 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அவருக்கு அடுத்ததாக வந்த கேப்டன் சல்மான் ஆகா 1 ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார்.

அதனால் மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல மெதுவாக விளையாடிய சாய்ம் ஆயுப் 22 (26) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 54/4 என தடுமாறிய பாகிஸ்தான் அணிக்கு ஐந்தாவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய பகார் ஜமான் 43 (32) ரன்களை குவித்து சரிவை சரி செய்து அவுட்டானார்.

- Advertisement -

மோசமான சாதனை:

அவருடன் இணைந்து விளையாடிய உஸ்மான் கான் 37* (28) ரன்கள் எடுத்தார். இறுதியில் முகமது நவாஸ் அதிரடியாக 21* (12) ரன்கள் எடுத்த உதவியுடன் 19.2 ஓவரில் 151/5 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்பே அணிக்கு அதிகபட்சமாக பிராட் எவான்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக நிதீஷ் ரெட்டி தான் ஆடுவார் – அதுக்கு காரணம் இதுதான்

முன்னதாக இப்போட்டியையும் சேர்த்து பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் 9வது முறையாக டி20 கிரிக்கெட்டில் டக் அவுட்டாகியுள்ளார். அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடியை முந்திய அவர் 2வது இடத்தைப் பிடித்து மோசமான சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சாய்ம் ஆயுப்: 10*
2. பாபர் அசாம்: 9*
3. ஷாஹித் அப்ரிடி: 8

- Advertisement -