இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியின் போது விளையாடிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக முதல் இன்னிங்சில் 3 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் காயத்தின் தன்மை தீவிரமடைந்ததன் காரணமாக ஆம்புலன்ஸ் உதவியின் மூலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையிலும் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அடுத்த போட்டியில் நிதீஷ் ரெட்டி தான் ஆடுவார் :
தற்போது சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ள சுப்மன் கில் இரண்டாவது போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று பேசப்பட்டு வருவதால் அவருக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் இந்திய அணியை தலைமை தாங்குவார் என்று என்று தெரிகிறது. அதேவேளையில் சுபமன் கில்லுக்கு பதிலாக இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யார் விளையாடுவார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நிதீஷ் குமார் ரெட்டி முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இருந்து விடுவிக்கப்பட்டு இந்திய ஏ அணிக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் சுப்மன் கில் காயமடைந்துள்ள காரணமாக மீண்டும் அவர் டெஸ்ட் அணிக்கு வர வைக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடுவார் என்று பேசப்பட்டு வருகிறது.
ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஆறு இடது கை ஆட்டக்காரர்கள் இருப்பதினால் மேலும் ஒரு இடது கை ஆட்டக்காரராக சாய் சுதர்சனையோ, படிக்கல்லையோ நான்காம் இடத்தில் விளையாட வைக்க இந்திய அணி நினைக்காது. அதே வேளையில் வலது கை ஆட்டக்காரரான நிதீஷ்குமார் ரெட்டி மீண்டும் அணிக்குள் வந்துள்ளதால் அவரே வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது.
அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா போன்ற சவாலான மைதானத்திலேயே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அவர் பந்து வீச்சிலும் கை கொடுக்கக் கூடியவர் என்பதனால் அவர் சுப்மன் கில்லுக்கு மாற்றுவீரராக முதல் தேர்வாக இருப்பார். ஏற்கனவே டாப் ஆர்டரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் என இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள் இருக்கும் வேளையில் நான்காவது இடத்தில் வலது கை ஆட்டக்காரரான நிதீஷ் ரெட்டிக்கு இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சாய் சுதர்சனா? தேவ்தத் படிக்கலா? இரண்டாவது போட்டியில் கில்லுக்கு பதிலாக ஆடப்போவது யார்? – கும்ப்ளே பதில்
அவருக்கு அடுத்து ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் பட்டேல் என நிறைய இடதுகை ஆட்டக்காரர்கள் இருப்பதினால் நிச்சயம் நிதீஷ் ரெட்டி அந்த இடத்தினை பிடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை நிதீஷ் ரெட்டி பின் வரிசையில் தான் விளையாடுவார் என்றால் துருவ் ஜுரேல் நான்காவது இடத்தில் விளையாட வைக்கப்பட்டு ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் நிதீஷ் ரெட்டி விளையாடுவார் என்றும் தெரிகிறது.



