சாய் சுதர்சனா? தேவ்தத் படிக்கலா? இரண்டாவது போட்டியில் கில்லுக்கு பதிலாக ஆடப்போவது யார்? – கும்ப்ளே பதில்

Anil Kumble
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

சாய் சுதர்சனா? தேவ்தத் படிக்கலா? : அணில் கும்ப்ளே தேர்வு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி கௌகாத்தி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை சமன் செய்ய இந்திய அணி முனைப்பு காட்டும் என்பதனால் இந்த போட்டி பலரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதேவேளையில் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்பதால் அவரது இடத்தில் விளையாடப் போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் கழுத்து வலியால் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறிய சுப்மன் கில் அதன்பிறகு மீண்டும் போட்டிக்கு வரவில்லை.

அதுமட்டும் இன்றி இரண்டாவது போட்டியிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுவதால் இரண்டாவது போட்டியின் போது நிச்சயம் அவருக்கு பதிலாக வேறொரு வீரர் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவரது இடத்திற்கு சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக யார் விளையாட வேண்டும்? என்பது குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே கூறுகையில் : என்னை பொறுத்தவரை கில்லின் இடத்திற்கு சாய் சுதர்சன் வந்தால் சிறப்பாக இருக்கும். படிக்கல்லும் ஒரு ஆப்ஷன் தான். ஆனால் டாப் ஆர்டரில் நிறைய இடது கை ஆட்டக்காரர்கள் வந்தால் அது எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க : எல்லாரும் தடுமாறுன கொல்கத்தா பிட்ச்லயும் வாஷிங்டன் சுந்தர் அசத்த இதுவே காரணம் – முகமது கைப் கருத்து

இருந்தாலும் சாய் சுதர்சன் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர். அதுமட்டுமின்றி பெரிய இன்னிங்ஸ் விளையாடும் திறனும் அவரிடம் இருக்கிறது. எனவே அவர் கில்லின் இடத்தில் விளையாடினால் நன்றாக இருக்கும். அதே வேளையில் வலது கை வீரர் யாரையாவது முன்கூட்டியே விளையாட வைத்தாலும் அது பிளேயிங் லெவனுக்கு பேலன்சை தரும் என்றும் அணில் கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement