எல்லாரும் தடுமாறுன கொல்கத்தா பிட்ச்லயும் வாஷிங்டன் சுந்தர் அசத்த இதுவே காரணம் – முகமது கைப் கருத்து

Kaif and Sundar
- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது 124 ரன்கள் என்கிற சிறிய இலக்கினை துரத்திய இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியை சந்தித்திருந்தது.

வாஷிங்டன் சுந்தர் அசத்த இதுவே காரணம் : முகமது கைப் கருத்து

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்கள் மட்டுமே குவிக்க இந்திய அணி 189 ரன்கள் குவித்தது. பின்னர் 30 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் விளையாடிய தென்னாப்ரிக்க அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 183 ரன்களை குவிக்க 124 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்சில் 82 பந்துகளை சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 92 பந்துகளை சந்தித்து 31 ரன்கள் குவித்தார்.

இந்த போட்டியில் எந்த ஒரு இந்திய பேட்ஸ்மேனும் பெரியளவில் பந்துகளை எதிர்கொண்டு விளையாடாமல் இருந்த வேளையில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து கிட்டத்தட்ட 170 பந்துகள் விளையாடியிருந்தார். இப்படி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நிலைத்து நின்று அவர் விளையாட என்ன காரணம்? என்பது குறித்த காரணத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஏன் சிறப்பாக விளையாடினார்? என்றால் அவர் சென்னையில் இருந்து வந்திருக்கிறார். அவர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதனால் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களிலேயே விளையாடியிருப்பார். அதோடு சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர் கால்களை நகர்த்தி மிகச் சிறப்பாக விளையாடுகிறார். அவரது பேட்டிங் ஸ்டைலும் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு சரியாக இருப்பதால் அவரால் சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடிகிறது.

இதையும் படிங்க : பிட்ச்சை மட்டும் குறை சொல்லாதீங்க.. இந்திய பேட்ஸ்மேன்கள் ரஞ்சிக்கு போகாததும் தோல்விக்கு காரணம்.. கவாஸ்கர்

அதேபோன்று இந்திய அணியில் சாய் சுதர்சனும் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில் அவரும் சென்னையில் இருந்து வந்துள்ளார். அவர் மூன்றாவது இடத்திலும், வாஷிங்டன் சுந்தர் எட்டாவது இடத்திலும் இருந்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் நம்மால் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் அணியில் இல்லாமல் போனது இந்திய அணிக்கு பின்னடைவைத் தந்ததாகவும் முகமது கைப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement