PAK vs SL : இலங்கையை திருப்பி அடித்து நொறுக்கிய பாகிஸ்தான்.. உ.கோ வரலாற்றில் மாபெரும் உலக சாதனை வெற்றி

PAk vs SL
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 10ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 8வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பல பலப்ப்ரீட்சை நடத்தின. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி அந்த அணிக்கு குசால் பெரேரா ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி சென்றார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த குஷால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் 2வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிசாங்கா நிதானமாக விளையாடி 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த சமரவிக்கிரமாவுடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த குசால் மெண்டிஸ் அதிரடியாக 14 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 122 (77) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

பாகிஸ்தானின் சரித்திரம்:
அவரைத் தொடர்ந்து வந்த அசலங்கா 1, டீ சில்வா 25, சனாகா 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தபோதிலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக செயல்பட்ட சமரவிக்ரமா 11 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 108 (89) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் 50 ஓவர்களில் 344/9 ரன்கள் குவித்த இலங்கை உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது.

சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹசன் அலி 4 விக்கெட்களையும் ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 345 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 12 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்கள் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 37/2 என ஆரம்பத்திலேயே தடுமாறி அந்த அணிக்கு அடுத்ததாக வந்த முகமது ரிஸ்வானுடன் மற்றொரு துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்தார்.

- Advertisement -

நேரம் அதிகரிக்க அதிகரிக்க நங்கூரமாக விளையாடிய அவர் 33 ஓவர்கள் வரை நிலைத்து நின்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 பவுண்டரி 3 சிக்சருடன் அறிமுக உலகக்கோப்பை போட்டியிலேயே சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையுடன் 113 (103) ரன்களில் ஹேமந்தாவின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த சவுத் சாக்கில் தம்முடைய பங்கிற்கு 4வது விக்கெட்டுக்கு ரிஸ்வானுடன் சேர்ந்து 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து வந்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுபுறம் தொடர்ந்து லேசான காயத்துடன் அசத்திய ரிஸ்வான் சதமடித்து 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 134* (119) ரன்களும் இப்திகார் அகமது 4 பவுண்டரியுடன் 22* (10) ரன்களும் எடுத்ததால் 48.2 ஓவரிலேயே 348/4 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக 1975 முதல் தற்போது வரையிலான உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச இலக்கை (345) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை பாகிஸ்தான் படைத்து அடுத்த போட்டிக்கு தயாராக இருக்கிறோம் என இந்தியாவையும் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: ENG vs BAN : இந்த மேட்ச்ல நான் 140 ரன் எடுத்து அசத்த இதுவே காரணம் – ஆட்டநாயகன் டேவிட் மலான் பேட்டி

இதற்கு முன் 2011 உலக கோப்பையில் பெங்களூருவில் இங்கிலாந்து நிர்ணயித்த 328 ரன்கள் இலக்கை அயர்லாந்து வெற்றிகரமாக துரத்தியதே முந்தைய சாதனையாகும். இத்தனைக்கும் உலக கோப்பையில் இதற்கு முன் 300 ரன்கள் கூட சேசிங் செய்யாத பாகிஸ்தான் இம்முறை சாதனை படைக்கும் அளவுக்கு சுமாராக செயல்பட்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement