171 ரன்ஸ்.. குறைத்து மதிப்பிட்ட பாக் வீரரை ஜெட் வேகத்தில் அவுட்டாக்கிய சூரியகுமார்.. இந்தியா வெல்லுமா?

IND vs PAK Run Out
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொண்டது. செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு பர்ஹான் 0 ரன்களில் கொடுத்த கேட்ச்சை அபிஷேக் ஷர்மா கோட்டை விட்டார். அதைப் பயன்படுத்திய அவர் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் வந்த பகார் ஜமாத் 15 (9) ரன்னில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த சாய்ம் ஆயுப் அதிரடியாக விளையாட முயற்சித்து துபாய் வேகத்தில் 21 (17) ரன்னில் அபிஷேக் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் 171 ரன்ஸ்:

அதற்கடுத்து வந்த ஹுசைன் தாலத் 10 (11) ரன்னில் குல்தீப் சுழலில் சிக்கினார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஃபர்கான் அரை சதத்தை அடித்து 58 (45) ரன்கள் குவித்த போது சிவம் துபே வேகத்தில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த முகமது நவாஸ் தடுமாற்றமாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்துக்குப் பின் அதிரடி காட்டிய அவர் 19வது ஓவரில் 21 (19) ரன்கள் எடுத்திருந்த போது டபுள் எடுக்க ஓடினார். ஆனால் 2வது ரன்னை எடுக்கும் போது முன் இந்திய வீரர் பந்தை எடுத்ததை பார்த்த அவர் ஓடுவதை நிறுத்தி விட்டு மீண்டும் வெள்ளைக் கோட்டுக்கு திரும்ப முயற்சித்தா. அப்போது அவர் மிகவும் மெதுவாக அஜாக்கிரதையாக நடந்து வந்து மீண்டும் வெள்ளைக்கோட்டை தொட்டார்.

- Advertisement -

சூர்யகுமார் அசத்தல்:

அதற்குள் பந்தை எடுத்த இந்திய கேப்டன் சூரியகுமார் துல்லியமாக ஸ்டம்பில் அடித்தார். அதனால் சோம்பேறித்தனத்தால் சில இன்ச் இடைவெளியில் நவாஸ் ரன் அவுட்டாகி சென்றார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பகீம் அசரப் 20* (8), கேப்டன் சல்மான் ஆகா 17* (13) ரன்கள் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் பாகிஸ்தான் 171/5 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: பாகிஸ்தானிடம் இந்தியா செஞ்சது தப்பு தான்.. அதுக்கு நீங்க சம்மதம் சொல்லாம இருக்கலாமே.. அசாருதீன் அதிருப்தி

இந்திய அணிக்கு சிவம் துபே 2 ஹர்டிக் பாண்டியா 1, குல்தீப் யாதவ் 1 விக்கெட்டுகள் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி விக்கெட்டுகள் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement