பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் முதலிடம் பிடித்து அசத்திய பாகிஸ்தான் வீரர்கள் – இந்திய எந்த இடம்?

IND-vs-PAK
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீரர்கள் :

அதனை தொடர்ந்து தற்போது ஐசிசி-யானது புதிய ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வெளியான இந்த தரவரிசை பட்டியலின் இரு துறையிலும் பாகிஸ்தான் வீரர்கள் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

- Advertisement -

பேட்டிங் துறையினை பொறுத்தவரை பாகிஸ்தான அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இடமும், துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் மூன்றாவது இடமும், நட்சத்திர வீரரான விராட் கோலி நான்காவது இடத்தினையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

அதேபோன்று ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி முதலிடமும், ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்கா அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் மூன்றாவது இடத்தினையும்பிடித்துள்ளனர்.

- Advertisement -

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் நான்காவது இடத்தையும், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா ஆறாவது இடத்தையும், முகமது சிராஜ் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஒரு வழியாக போராடி ரஞ்சி கோப்பையில் அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர்.. கோவா அணிக்காக அசத்தல்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement