ஒரு வழியாக போராடி ரஞ்சி கோப்பையில் அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர்.. கோவா அணிக்காக அசத்தல்

Arjun
- Advertisement -

இந்தியாவில் தற்போது பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரஞ்சி கோப்பை தொடரில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற மாநில அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அந்த வகையில் பல்வேறு மாநில அணிகள் விளையாடி வரும் இந்த தொடரில் அருணாச்சல பிரதேஷ் மற்றும் கோவா ஆகிய அணிகள் கோவாவில் உள்ள கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் விளையாடி வருகிறது.

ரஞ்சி போட்டியில் அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர் :

இந்த போட்டியில் கோவா அணி சார்பாக விளையாடி வரும் அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் முதல்தர ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகனான இவர் கடந்த பல ஆண்டுகளாகவே மும்பை அணிக்காக ரஞ்சி போட்டிகளில் இடம்பிடித்திருந்த வேளையில் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கோவா அணிக்காக இடம்பெயர்ந்து அந்த அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் 25 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் அருணாச்சல பிரதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் கோவா அணி சார்பாக 9 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக அருணாச்சல பிரதேஷ் அணியானது வெறும் 84 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இந்த போட்டியில் அவர் மொத்தமாக ஒன்பது ஓவர்கள் பந்துவீசி வெறும் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி ரஞ்சி தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவுசெய்து அசத்தினார்.

இதையும் படிங்க : 80ஸ் வெ.இ அணியாலேயே முடியல.. இந்தியா கனவு காணாம இதை செய்யனும்.. கவாஸ்கர், மஞ்ரேக்கர் அறிவுரை

இதற்கு முன்னதாக 49 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட் வீழ்த்தியதே அவரது சிறப்பான பந்துவீச்சாக இருந்தது. இந்நிலையில் அவரது இந்த சாதனையை முறியடித்த அவர் தற்போது முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதுமட்டும் இன்றி 1 சதம் மற்றும் இரண்டு அரை சுதம் என 532 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement